Breaking News LIVE: தமிழ்நாட்டில் நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட மொத்தம் 24 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை..!
Breaking News LIVE: நாடு முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.
LIVE

Background
மணிப்பூர் விவகாரம் குறித்து அண்ணாமலை பேட்டி
மணிப்பூரில் என்ன நடக்கிறது என தெரியாமல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசியல் செய்து வருகிறார். மணிப்பூர் பிரச்சனையை மத்திய அர்சும் மணிப்பூர் அரசும் சரி செய்ய வேண்டும், சரி செய்யும் அவசியத்தில் உள்ளார்கள் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
ட்ரோன்கள் பறக்க தடை
ஜி-20 மாநாட்டிற்கான ஏற்பாடுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிப்படுகிறது என சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டிற்கான ஜி20 மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் டெல்லியில் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இப்போது இருந்தே துவங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை அதாவது வரும் புதன்கிழமை வரை நடைபெறவுள்ள ஜி20 நிகழ்வுகள் நடைபெறும் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக சென்னை மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள டிவிட்டர் பதிவில் கிண்டி, கிராண்ட் சோலா மற்றும் மாகாபாலிபுரம் ஆகிய பகுதிகளில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.
என்.ஐ.ஏ சோதனை..!
நெல்லை, தஞ்சாவூர் உள்ளிட்ட 24 இடங்களில் என்.ஐ.ஏ அதிரடியாக சோதனை செய்து வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

