Breaking Live : விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
Breaking News LIVE Updates: இன்றைய நாளின் முக்கியச் செய்திகள் உடனுக்குடன்..

Background
விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் நளினி மனு தாக்கல்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யக்கோரி நளினி மனுதாக்கல் செய்துள்ளார். இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். பேரறிவாளன் வழக்கை சுட்டிக் காட்டி மனுதாக்கல் செய்துள்ளார்.
இரு நாட்களாக நடந்து வந்த வாதம் நிறைவு பெற்றதை அடுத்து தீர்ப்பு தள்ளிவைப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து தாக்கல் செய்த மனு மீது விசாரணை. இருதரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி ஜெயச்சந்திரன்.
அதிமுக பொதுக்குழு வழக்கு - தீர்ப்பு தள்ளி வைப்பு
அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஒபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு
சென்னை பெருநகரில் சாரல் மழைக்கு வாய்ப்பு
சென்னையை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சாரல் மழைக்கு வாய்ப்பு.
பதிவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு
குடியரசுத் துணைத் தலைவர் பதிவியேற்பு விழாவில் பிரதமர் மோடி, அமித் ஷா , நிர்மளா சீதாராமன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் பங்கேற்பு.

