மேலும் அறிய

இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க குழு.. அப்செட்டான சீனா.. என்ன மேட்டர்?

அமெரிக்க அரசின் பிரதிநிதிகள், இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்து பேசியது புவிசார் அரசியல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

திபெத் பகுதி சீனாவின் ஒரு அங்கமா அல்லது சுதந்திரமான பகுதியா என்ற விவகாரத்தால் சீனாவுக்கும் நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கும் பிரச்னை நிலவி வருகிறது. வரலாற்றில், திபெத் எப்போதும் சீனாவின் பகுதியாக இருந்ததில்லை என நாடு கடந்த திபெத் அரசு கூறி வருகிறது.

ஆனால், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே திபெத் உள்ளதாக சீன அரசு தெரிவித்து வருகிறது. இதனால், திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கும் சீன அரசுக்கும் தொடர் பிரச்னை நிலவி வருகிறது. எனவே, அவர் இந்தியாவில் வசித்து வருகிறார். 

தலாய் லாமாவை சந்தித்த அமெரிக்க குழு: இந்த விவகாரத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் தலாய் லாமாவுக்கு ஆதரவு அளித்து வருவது சீனாவை கோபப்படுத்தி வந்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய உயர்மட்ட குழு, இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்து பேசியுள்ளது.

பின்னர், தர்மசாலாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க உயர்மட்ட குழு உறுப்பினர்கள், "புதிய தலாய் லாமாவை தேர்ந்தெடுப்பதில் சீனாவை தலையிட விட அனுமதிக்க மாட்டோம்" என்றார்கள். அமெரிக்க கீழ் சபை வெளி விவகாரங்கள் கமிட்டி தலைவர் மைக்கேல் மெக்கால், இதுகுறித்து பேசுகையில், "திபெத் விவகாரத்தில் அமெரிக்கா உறுதியான நிலைபாட்டை கொண்டுள்ளது. திபெத்துடன் தங்களுக்கு பண்டையகால உறவு இருக்கிறது சீனா சொல்வது அபத்தமானது" என்றார்.

திபெத்திய மக்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவோம். சிறந்த எதிர்காலத்திற்கான உங்கள் கனவுகள் உயிர்ப்புடன் இருக்கிறது. வளர்ச்சி நடவடிக்கைகள் என்ற போர்வையில் ஒட்டு மொத்த திபெத்திய சமூகத்தை சீன அரசு இடமாற்றம் செய்கிறது.

பயங்கர அப்செட்டான சீனா: அவர்கள் திபெத்திய பௌத்தத்தை கட்டுப்படுத்த முயல்கிறார்கள் என்பதை நாம் அறிவோம். தலாய் லாமாவுடன் சீனா நிபந்தனையற்ற உரையாடலில் ஈடுபட வேண்டிய நேரம் இது" என அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் கிரிகோரி மீக் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின் பிரதிநிதிகள், இந்தியாவில் தலாய் லாமாவை சந்தித்து பேசியது புவிசார் அரசியல் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. திபெத் விவகாரத்தில் அமெரிக்க அரசின் பிரிதிநிதிகள் தெரிவித்த கருத்துக்கு இந்திய அதிகாரி பதில் கூற மறுத்துவிட்டார். மேலும், இது அவர்களின் தனிப்பட்ட பயணம் எனக் கூறியுள்ளார்.

அமெரிக்கா தெரிவித்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள சீனா, "இறையாண்மை, சீனாவின் நலனை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: TN Assembly Session LIVE: இரங்கல் தீர்மானம் வாசிப்பு - தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஒத்திவைப்பு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TRUST Exam: பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை: ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
Embed widget