மேலும் அறிய

ஓராசிரியர் பள்ளியாக கல்லூரி துறைகளை மாற்றுவதா? நிரந்தர நியமனமும் இல்லையா? அன்புமணி விளாசல்!

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத்  தொடங்கப்பட்ட  பாடப்பிரிவுகளுக்கு  முதலாம் ஆண்டில் குறைந்தது தலா இரு நிரந்தர ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும்.

ஒரு துறைக்கு ஒரே ஓர் ஆசிரியர் மட்டுமா என்றும் கல்லூரி துறைகளையும் ஓர் ஆசிரியர் பள்ளிகளாக மாற்றுவதுதான் திமுகவின் சமூக நீதியா எனவும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் உள்ள 100 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் நடப்பாண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அந்தப் படிப்புகளை நடத்துவதற்காக 252 கவுரவ விரிவுரையாளர்களை மட்டும் நியமித்துக்கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. பொதுவாக கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் துறைகளில் முதல்கட்டமாக 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும் என்ற குறைந்தபட்சத் தேவையைக் கூட நிறைவேற்ற தமிழக அரசு மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 57 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 203 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அப்படிப்புகளில் 10,396 மாணவர் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.  மேலும் 43 கல்லூரிகளில் 49 புதிய பாடப்பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டு, அவற்றில் 2,950 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மொத்தம் 100 கல்லூரிகளில் 252 புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு, அவற்றில் 13, 346 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றுக்கு ஒரு படிப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் 252 ஆசிரியர்களை மட்டுமே நியமித்துக்கொள்ள அரசு அனுமதி அளித்திருக்கிறது. அவர்கள் கூட நிரந்தர உதவிப் பேராசிரியர்கள் அல்ல. அவர்கள் அனைவரும் மாதம் ரூ.25,000 மட்டுமே ஊதியம் பெறும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆவர்.

ஒரே ஓர் ஆசிரியர் கூட கூடுதலாக இல்லை

இவை தவிர, 29 அரசு கல்லூரிகளில் ஏற்கனவே உள்ள 173 படிப்புகளில் 2008 மாணவர் சேர்க்கை இடங்கள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்காக ஒரே ஒரு ஆசிரியர் கூட கூடுதலாக நியமிக்கப் படவில்லை. புதிதாக அறிமுகம் செய்யப்படும் பாடப்பிரிவுகளுக்கு குறைந்தது 3 ஆசிரியர்களாவது நியமிக்கப்படுவதுதான் தரமான கல்வி வழங்குவதற்கு போதுமானதாக இருக்கும். ஆனால், தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் ஒரே ஓர் ஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல.

புதிய பாடப்பிரிவுகளை அறிமுகம் செய்வது குறித்து அரசுக்கு பரிந்துரைத்த கல்லூரிக் கல்வி ஆணையரகம், 252 புதிய பாடப்பிரிவுகளுக்கும் சேர்த்து 558 கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க வேண்டும்; அவர்களின் ஊதியத்திற்காக ரூ.13.95 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால், அதை ஏற்றுக்கொள்ளாத உயர் கல்வித்துறை, கல்லூரிக் கல்வி ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக ரூ.6.30 கோடியை மட்டுமே ஒதுக்கீடு செய்திருக்கிறது.

உயர் கல்வியை இழிவுபடுத்தும் செயல்

கல்லூரி ஆசிரியர்களை நியமிக்கும் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆணையரகம் கோரியதில் பாதிக்கும் குறைவாக அரசு ஒதுக்கீடு செய்கிறது என்றால், உயர்கல்வி வழங்குவதை கத்தரிக்காயை பேரம் பேசி வாங்குவதைப் போல நினைக்கிறதா? என்ற ஐயம்தான் எழுதுகிறது. இது உயர்கல்வியை இழிவுபடுத்தும் செயலாகும்.

அண்மையில் தமிழ்நாட்டில் 11 புதிய அரசு கலைக் கல்லூரிகள் தொடங்கப்பட்டன.  ஒவ்வொரு கல்லூரியிலும்  5 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு,  அவற்றை நடத்துவதற்காக தலா 12 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்றும் ஆணையிட்டுள்ளது. புதிய கல்லூரிகளில் ஒரு பாடப்பிரிவுக்கு தலா 2 ஆசிரியர்களுக்கும் கூடுதலாக நியமிக்கும் தமிழக அரசு, ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் மட்டும் புதிதாக தொடங்கப்படும் பாடப்பிரிவுகளுக்கு மட்டும் ஒரே  ஓர் ஆசிரியரை நியமிப்பது எந்த வகையில் நியாயம்? ஓர் ஆசிரியரைக் கொண்டு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

குழி தோண்டிப் புதைக்கும் நிலை


தமிழ்நாட்டில் தரமானக் கல்வியை வழங்குவதாகக் கூறிக் கொள்ளும் திமுக அரசு, 4000-க்கும் கூடுதலான பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாகவே நடத்தப்படுகின்றன. அதேபோல், அரசு கலைக் கல்லூரிகளின் துறைகளையும் ஓராசிரியர் துறைகளாக மாற்ற தமிழக அரசு துடிக்கிறது. தமிழக அரசின் இந்த அணுகுமுறை உயர் கல்வியின் தரத்தை குழி தோண்டிப் புதைக்கும் நிலைக்குதான் இட்டுச் செல்லும்.

தமிழ்நாட்டில் உள்ள 129 கல்லூரிகளில் நடப்பாண்டில் 15 ஆயிரத்து 354 மாணவர் சேர்க்கை இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், அந்த மாணவர்களுக்கு கல்வி வழங்குவதற்காக தமிழக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.6.3 கோடி மட்டும்தான். அதாவது ஒரு மாணவரின் உயர்கல்விக்காக மாதம் ரூ.410, பத்து மாதங்களைக் கொண்ட கல்வியாண்டுக்கு ரூ.4103 மட்டுமே அரசு செலவிடுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு ஒரு மாணவருக்கு ஆத்திச்சூடி கூட கற்பிக்க முடியாது எனும்போது தரமான பட்டப்படிப்பை வழங்குவது எவ்வாறு சாத்தியமாகும்? என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும்.

தமிழக அரசு கல்லூரிகளுக்கு கடந்த பத்தாண்டுகளில் ஒரே ஓர் உதவிப் பேராசிரியர் கூட நியமனம் செய்யப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் சுமார் 10 ஆயிரத்து 500 பணியிடங்கள் உள்ள நிலையில், அவற்றில் 9000-க்கும் கூடுதலான பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 7500-க்கும் கூடுதலான இடங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் மட்டுமே நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கவுரவ விரிவுரையாளர்கள் நியமனத்திலும் கூட இட ஒதுக்கீட்டு  முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இப்படியாக உயர்கல்வியின் தரம், சமூகநீதி ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் துரோகம் இழைக்கிறது தமிழக அரசு. இந்தப் போக்கை இனியாவது கைவிட வேண்டும்.

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் புதிதாகத்  தொடங்கப்பட்ட  பாடப்பிரிவுகளுக்கு  முதலாம் ஆண்டில் குறைந்தது தலா இரு நிரந்தர ஆசிரியர்களாவது நியமிக்கப்பட வேண்டும். அனைத்துக் கல்லூரிகளிலும் உள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட வேண்டும். இனிவரும் காலங்களில் கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டால், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்பட வேண்டும். தகுதியுடைய கவுரவ விரிவுரையாளர்கள் 2 மாதங்களில் பணி நிலைப்பு செய்யப்பட வேண்டும்’’.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TNPSC தேர்வர்களே.. மே 28தான் கடைசி; அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க- டிஎன்பிஎஸ்சி அலர்ட்!
TNPSC தேர்வர்களே.. மே 28தான் கடைசி; அதுக்குள்ள இதை செஞ்சிடுங்க- டிஎன்பிஎஸ்சி அலர்ட்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... பல்வேறு துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு !
சிவகங்கை மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி... பல்வேறு துறையில் சாதிக்க மாணவர்களுக்கு வாய்ப்பு !
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Labor Management: தொழிலாளர் மேலாண்மையில் பட்டப் படிப்பு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Kanimozhi Santhosh issue | ”மகாராணி-னு நினைப்போ
யானை விழுந்து மனைவி பலி கண்களை தானம் செய்த கணவர் “அவ கடைசி வரை பார்க்கணும்”
பினராயி கோட்டையை வீழ்த்தியகாங்கிரஸின் பிரம்மாஸ்திரம் !யார் இந்த வி.டி.சதீசன்?
Elephant Attack | கையில் குழந்தையுடன் போராடிய கணவன்..யானை மிதித்து தாய் பலி!வைரல் வீடியோ
PTR Palanivel Thiagarajan | ”தோத்துருவேனு நினைக்கல! விஜய்க்கு இவ்ளோ ஓட்டா” PTR எமோஷனல் பதிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CM Vijay: முதலமைச்சர் விஜய் ஆலோசனை கூட்டத்தில் செல்ஃபி வீடியோ எடுத்தது யார்? வெளியான உண்மை!
CV Shanmugam : தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
தவெகவுடன் கூட்டணி அமையாமல் தடுத்தது இபிஎஸ் தான்- நடந்தது என்ன.? ரகசியத்தை உடைத்த சி.வி.சண்முகம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Kanimozhi:அரியணையில் அமர்ந்து பேச்சு; அதிகாரிகளுக்கு அவமரியாதை? தவெக எம்எல்ஏ கனிமொழி விளக்கம்
TVK Vijay: தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
தவெகவின் முதல் MP யார்? டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி ஜாக்பாட் யாருக்கு? - விஜய் தீவிர ஆலோசனை
Annamalai : ’அவர் மீண்டும் வரனும் – பாஜகவில் எழத் தொடங்கியது கலக குரல்’ தலைவராகிறாரா அண்ணாமலை..?
’அண்ணாமலைக்கு ஆதரவாக எழும் குரல்கள்’ மீண்டும் பாஜக தலைவர் ?
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
Karthigai Deepam: திடீர் என்ட்ரி கொடுத்த ராஜா சேதுபதி.. மாப்பிள்ளைக்கு மாமியாரின் புது சேலஞ்ச்!
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
PM Shri Scheme: பிஎம் ஸ்ரீ திட்டத்துக்கு ஆதரவு? மும்மொழிக் கொள்கை? அழுத்தத்துக்கு அடிபணியமாட்டோம்- அமைச்சர் ராஜ்மோகன்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
குறையுமா குற்றங்கள்? மாற்றுத்திறனாளி பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கஞ்சா கும்பல் அட்டூழியம்
Embed widget