Siragadikka Aasai: ரோகிணியால் விஜயாவுக்கு வந்த புது பிரச்சனை! திருட்டு பழிவேறையா.. சிறகடிக்க ஆசை அடுத்த வார அப்டேட்!
விஜய் டிவியில் தற்போது பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் அடுத்த வார புரோமோ தற்போது வெளியாகி உள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'சிறகடிக்க ஆசை'. கடந்த சில மாதங்களாக மிகவும் பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் சென்று கொண்டிருக்கிறது. அதே போல் அய்யனார் துணை சீரியலுக்கு டப் கொடுக்கும் விதத்தில் இந்த வாரம் TRP -யில் முதல் இடத்தை கைப்பற்றியது சிறகடிக்க ஆசை.
இந்த தொடர் தற்போது 700 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த சீரியலை... குமரன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில், கோமதி பிரியா ஹீரோயினாக நடிக்க வெற்றி வசந்த் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர்களுடன் ஆர் சுந்தர் ராஜன், அனிலா ஸ்ரீகுமார், ஸ்ரீ தேவா, சல்மா அருண், யோகேஷ் குமார், ப்ரீத்தா ரெட்டி போன்ற பலர் நடித்து வருகிறார்கள்.
தற்போது இந்த சீரியலில் சீதாவின் கல்யாண பிரச்சனை தான் பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீதா, அருண் என்கிற காவலரை காதலிக்கும் நிலையில்... முத்து அருண்னுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அருணுக்கு சீதாவை திருமணம் செய்து வைக்க மாட்டேன் என்பதில் உறுதியாக உள்ளார். அதே நேரம் மீனா தன்னுடைய தங்கைக்கு பிடித்த வாழ்க்கையை அமைத்து தருவதில் உறுதியாக உள்ளார். இந்த நிலையில், முத்து மனம் மாறுமா? மாறாதா என்பதே பலரின் கேள்வியாக உள்ளது.
அதே போல் மற்றொருபுறம் மனோஜ் வாழ்க்கையில் இருந்து ரோஹிணியை விரட்டி விட்டுவிட்டு அவருக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்து வருகிறார் விஜயா. ஆனால் ரோகிணி எப்படியாது விஜயாவின் மனதில் மீண்டும் இடம்பிடிக்க வேண்டும் என முயன்று வருகிறார்.
அந்த வகையில் தான், ரோகிணி சிட்டிக்கு உதவியதாக சிட்டி அவருக்கு தங்க செயின் ஒன்றை பரிசாக கொடுத்தார். அது திருட்டு நகை என்று தெரியாமல், ரோகிணி அந்த செயினை விஜயாவுக்காக வாங்கியதாக கூறி பரிசாக கொடுக்கிறார். விஜயாவுக்கு, ரோகிணி மீது கோவம் இருந்தாலும் அதை வாங்கிக்கொள்ளும் நிலையில்... அந்த செயினால் தான் இப்போது விஜயாவுக்கு புது பிரச்சனை வந்துள்ளது.
விஜயா நிகழ்ச்சி ஒன்றில்... அந்த செயின் போட்டு கொண்டு அலங்காரம் செய்து கொண்டு பங்கேற்கிறார். அங்கு வந்த பெண் ஒருவர் விஜயா கழுத்தில் இருந்த செயினை பார்த்து, தன்னுடைய செயின் போல் இருப்பதாக கூறி விசாரிக்கிறார். விஜயாவின் தோழி பார்வதி ஒரே மாதிரி பல செயின் இருக்குமே என சொல்ல, அதற்க்கு அந்த பெண்... தன்னுடைய நகை திருடு போய் விட்டதாகவும், தன்னுடைய பெயரை கூறி, அந்த டாலரில் இருக்கும் சீல் பற்றி சரியாக சொல்கிறார். அதை பார்த்தபோது அது திருட்டு நகை என்பதை உறுதி செய்கிறார்.
அடுத்த வாரம் நடக்க உள்ள இந்த சம்பவம் குறித்த புரோமோ தற்போது வெளியாகி உள்ளதை தொடர்ந்து, இதனால் ரோகிணி என்ன பிரச்சனையில் சிக்க போகிறார்... அவரை பற்றிய மற்ற ரகசியங்களும் வெளியாகுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
View this post on Instagram





















