TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்
Tamil Nadu Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் காண, ஏபிபி நாடு இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Background
Tamil Nadu Assembly Session LIVE Updates: தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி, கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக பெரும் விவாதமே நடைபெற்று வருகிறது.
தொடங்கிய சட்டசபை கூட்டத்தொடர்:
முதல் நாளான வியாழக்கிழமை சட்டசபையில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்து காலமான புகழேந்தி மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட உள்ளது. இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகு முதல் நாள் சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை (ஜூன் 21) முதல் சட்டசபை கூட்டத் தொடர் விவாதங்களுடன் தொடங்கியது. வழக்கமாக, தமிழக சட்டசபை கூட்டத்தொடரானது காலை 10 மணிக்கு தொடங்குவது வழக்கம். ஆனால், நடப்பாண்டு சட்டசபை கூட்டத்தொடர் காலை 9.30 மணிக்கே தொடங்கும் என்று ஏற்கனவே சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார்.
எப்படி செயல்படும்?
வழக்கமாக, சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கிய முதல் 1 மணி நேரம் கேள்வி – பதில் நேரமாக நடைபெறும். இந்த 1 மணி நேரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதியில் நிறைவேற்ற வேண்டிய திட்டங்கள் குறித்து, அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்களிடம் கோரிக்கைகளையும், கேள்விகளையும் முன்வைப்பார்கள். அதற்கு அவர்கள் பதில் அளிப்பார்கள்.
1 மணி நேரம் முடிந்த பிறகு, முதலமைச்சர் 110 விதியின் கீழ் ஏதேனும் திட்டங்களை கொண்டு வந்தால், அதற்கான அறிவிப்பை வெளியிடுவார். அதன்பின்பு, 55 விதியின் கீழ் ஏதேனும் சிறப்பு தீர்மானம் விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டு, விவாதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. 110 விதி மீதான அறிவிப்பு மற்றும் 55 விதியின் கீழ் சிறப்பு தீர்மானம் என்பது தினசரி நடப்பதற்கு வாய்ப்புகள் குறைவு. அதன்பின்பு, ஒவ்வொரு துறை சார்ந்த மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும்.
இனி காலை 9.30 மணிக்கு கூட்டத்தொடர்:
22-ந் தேதியில் இருந்து காலை 9.30 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடர் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். அதன்பின்பு, மாலை 5 மணியளவில் தொடங்கி இரவு 8 மணி வரை சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறும்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரின் கடைசி நாளான 29ம் தேதி மட்டும் காலையில் சட்டசபை கூட்டம் நடைபெறும். இந்த சட்டசபை கூட்டத்தொடரில் மொத்தம் 16 அமர்வுகள் நடைபெற உள்ளது. இதில் மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற உள்ளது.
சட்டசபையில் எதிரொலித்த கள்ளச்சாராய விவகாரம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தலைவர்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பதால் வழக்கத்தை விட சட்டசபையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நடப்பு சட்டசபை கூட்டத்தொடர் மிகவும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்று வருகிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த விவகாரம் பெரியளவில் சட்டசபையில் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.
பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சாதி மறுப்புத் திருமணம் தொடர்பான அனைத்து வகை குற்றங்களிலும் வழக்குகளை விரைந்து நடத்திட, அரசுத் தரப்பில் பிரத்யேகமாக சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- இதுபோன்ற குற்றங்களில் குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி காவல் ஆய்வாளர் விசாரணை அலுவலராக நியமிக்கப்படுவார். ஆனால் இவ்வழக்குகளில் விசாரணையின் தன்மையை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் விசாரணை அலுவலராக காவல் கண்காணிப்பாளரை நியமிப்பது குறித்து சட்ட ஆலோசனை பெற்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
TN Assembly Session LIVE: சாதிவாரி கணக்கெடுப்பு - முதலமைச்சர் தனித் தீர்மானம்
Caste Census Resolution : சாதிவாரி கணக்கெடுப்பை வலியுறுத்தி, சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்





















