(Source: ECI | ABP NEWS)
குமாரை அடி வெளுத்து வாங்கிய அரசி.! ராஜீ சொன்ன ஹாப்பி நியூஸ் - திட்டு வாங்கிய கதிர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 506ஆவது எபிசோடில், அரசியின் ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீர்யல் நாளுக்கு நாள் ஆக்ஷன் காட்சிகளுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அரசி மற்றும் குமாரவேலுவின் காதல் மற்றும் திருமணத்திற்கு பிறகு இன்னும் சுவாரஸ்யம் கூடியிருக்கிறது. நேற்றைய எபிசோடில் குமாரவேலு அரசியின் கழுத்தை நெரிப்பது போன்ற காட்சிகளுடன் முடிந்தது.
இதைத் தொடர்ந்து இன்றைய எபிசோடில் அதற்கு பதிலடி கொடுக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதாவது குமாரவேலுவை பிரட்டி போட்டு கையை முறுக்கி கதற வைத்துள்ளார் அரசி. வலியால் துடித்த குமாரு அம்மா, அம்மா என்று கத்த காந்திமதி, மாரி, முத்துவேல், சக்திவேல், வடிவு என்று எல்லோருமே வந்துவிட்டார்கள்.

அவர்களிடம் அம்மாச்சி, உங்க பேரன் என்னை கழுத்தை நெரித்து கொலை செய்ய பார்க்கிறார் என்று அழுது நாடகமாடினார் அரசி. இதை நம்பிய குடும்பத்தினர் குமாரவேலுவை திட்டி தீர்த்து அறிவுரை வழங்கி சென்றனர். இதைத் தொடர்ந்து ராஜீ மற்றும் கதிரின் செமஸ்டர் ரிசல்ட் வந்தது. இதில், ராஜீ எல்லா பாடத்திலும் பாஸாகி 81 சதவிகிதம் பெற்றார். ஆனால், கதிர் 4 பாடத்தில் தோல்வி அடைந்ததாக கூறினார். இதைத் தொடர்ந்து பாண்டியன் வழக்கம் போல் கதிரை திட்டி தீர்த்துள்ளார்.
மற்றொருபுறம் செந்தில், அரசு வேலைக்காக ரூ.10 லட்சம் பணத்தை தனது மாமனாரிடம் கொடுத்த நிலையில், இதுபற்றி மாமனாரிடம் சொல்லவேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து அரசி தனது செமஸ்டர் ரிசல்ட் மார்க்கை காந்திமதியிடம் கூறினார். அதில், எல்லா பாடத்திலேயும் 80 மதிப்பெண்களுக்கு மேல் வாங்கி பாஸ் ஆகியிருப்பதாக கூற மாரி மற்றும் காந்திமதி இருவரும் சந்தோஷப்படுகிறார்கள்.
கடைசியில் குமாரை அழைத்து கோயிலுக்கு சென்று சுவாமி பெயரில் ஒரு அர்ச்சனை செய்துவிட்டு வா என்று காந்திமதி அறிவுரை வழங்கினார். அதோடு இன்றைய எபிசோடு முடிவடைந்தது





















