மேலும் அறிய

மதுரையில் காவல்நிலையத்தை சூறையாடிய இருவர் விருதுநகரில் கைது !

மதுரையில் காவல்நிலையத்தை தாக்கிய இரு நபர்கள் விருதுகரில் கைது செய்யப்பட்டு, விசாரணை செய்யப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்நிலையத்தில் ஏட்டை அறையில் அடைத்த இளைஞர்கள்

 மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் தலைமை காவலர் பால்பாண்டி பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நள்ளிரவில் முகமூடி அணிந்து, இரண்டு நபர்கள் காவல் நிலையத்திற்கு புகுந்து அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கி விட்டு காவலர் பால்பாண்டியை தாக்கி, அவரை அங்கிருந்த அறையில் அடைத்து வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பேரையூர் டி.எஸ்.பி., சந்திரசேகர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்குசென்று விசாரணை நடத்தினார். மேலும் சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி அரவிந்தன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனர்.

  காவல்நிலையம் சூறையாடல் - காவலர் மீட்பு  

போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வி.குச்சம்பட்டி அருகில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில். சிறையில் இருந்து வெளியே வந்த, வெங்கடாசலபுரத்தைச் சேர்ந்த போராளி பிரபாகரன் என்ற பிரபாகரன் என்பதும். இவர், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்புதான் வெளியில் வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் நள்ளிரவில் மது போதையில் வி.சத்திரப்பட்டி போலீஸ் ஸ்டேசன் வந்துள்ளார். அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஏட்டு பால்பாண்டியை அறைக்குள் அடைத்து வைத்துவிட்டு, அந்த அறையை பூட்டு போட்டு பூட்டி வைத்துள்ளார். மேலும் காவல்நிலையத்தில் உள்ள பொருட்களையும் அடித்து நொறுக்கி, சூறையாடியுள்ளார். பின்னர் கூடுதலாக ஆட்கள் வந்துவிடுவார்கள் என தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து நேற்று அதிகாலை காவல்நிலையம் அருகே வந்த நபர்கள் காவலர் பால்பாண்டியை மீட்டுள்ளனர்.

  குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை  

இது குறித்து காவல்துறை தரப்பில் கூறும் போது..,” காவல்நிலையத்தை சூறையாடிய பிரபாகரம் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளது. இதனால் பிராபகரன் அப்பகுதியில் தான் உள்ளாரா, என காவல்துறையினர் விசாரிப்பது வழக்கம். இந்த சூழலில் தன்னை காவல்துறையினர் அடிக்கடி தொந்தரவு செய்வதாக எண்ணி காவல்நிலையத்தில் இப்படி ஒரு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். பிராபகரன் மற்றும் அவரது கூட்டாளியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது” எனவும் தெரிவித்தனர்.

 காவல்நிலையத்தை சூறையாடிய குற்றவாளிகள் கைது

இந்நிலையில் மதுரை வி.சத்திரப்பட்டி காவல்நிலையத்தில் தாக்குதல் நடத்தி, காவலரை தாக்கியதாக கூறப்படும் அய்யனார் மற்றும் பிரபாகரனை காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த சூழலில் விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி பகுதியில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget