வேலைக்காரன் லவ் பண்ணுனா துவைச்சு புடுவேன்.. சிவாஜியா இப்படி சொன்னாரு! உண்மையை உடைத்த ராதாரவி
நடிகர் சிவாஜி கணேசன் என் தங்கையை வேலைக்காரன் காதலித்தால் துவைத்தெடுப்பேன் என்று ஆவேசமாக பேசியதாக நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ராதாரவி. சிவாஜி கணேசன், ரஜினி, கமல், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார். இவர் ஒரு முறை மறைந்த மூத்த நடிகர் சிவாஜி கணேசன் பற்றி கூறியதாவது,
சிவாஜி செய்த உதவி:
எல்லாருக்கும் அள்ளிக் கொடுத்தது ஒரே ஆள் புரட்சித்தலைவரோட முடிஞ்சு போச்சு. சிவாஜி சார் கொடுத்தது யாருக்காவது தெரியுமா? சொல்லுங்க. சைலண்டா கொடுப்பாரு. உண்மையை சொல்றேன் நிறைய பேருக்கு உதவிகள், பாராட்டு எல்லாமே நேர்ல கூப்பிட்டு தனியா அவர் ரூம்க்குள்ள வச்சு கொடுப்பாரு.
சின்ன தம்பி படம் ரிலீஸ் ஆகிருக்கு. அவர் எல்லார்கிட்டயும் சொல்றாரு. டேய் எங்க அண்ணன் மகன் எங்கடா இருக்கான் அவன். அவனை கூப்பிட்றா. என்னை அண்ணன் மவனு சொல்லுவாரு. விஜயகாந்தை நாயுடுனு சொல்லுவாரு. என்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க உன்னை கூப்பிட்றாருனு சொன்னாங்க. பிரபுமா கூட சொன்னுச்சு.
துவைச்சு புடுவேன்:
அப்போ வேலைகள் இருந்தது. இருந்தாலும் அவரு கூப்பிட்றாருல. நான் வரேனு சொல்லிட்டேன். உட்காந்தாரு ஹால்ல வாடா அப்படி, இப்படினு சொல்லிட்டு, நான் ஒரு அண்ணனா இருந்து என் தங்கச்சியை வீட்டு வேலைக்காரப்பய லவ் பண்ணா நான் இப்படிதான் இருப்பேன். இதே வார்த்தை சொன்னாரு சார். துவைச்சு புடுவேன். சொல்லிட்டு திருச்சி ஸ்லாங்ல ஒன்னு சொன்னாரு. நான் அப்டிங்களானு சொன்னேன். என்ன அப்படினு கேட்பாரு. அது அவருடைய போக்கு.
இவ்வாறு அவர் கூறினார்.
பராசக்தி படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமான சிவாஜி தமிழ் சினிமாவின் அடையாளமாக கொண்டாடப்படுபவர். எம்,ஜி.ஆருக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தை கொண்டிருந்தவர். மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர். இவரது மகனே நடிகர் பிரபு. நடிகர் பிரபு கதாநாயகனாக நடித்து பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சின்னதம்பி. இந்த படம் மாபெரும் வெற்றி படம் ஆகும். இந்த படத்தில் குஷ்புவின் மூத்த அண்ணனாக நடிகர் ராதாரவி நடித்திருப்பார்.
கிராமத்தில் வசதி வாய்ப்புடன் வாழ்ந்து வரும் 3 சகோதரர்கள் தங்களது ஒரே தங்கையை மிகவும் செல்லமாக வளர்த்து வருகிறார்கள். அந்த பெண் தங்கள் வீட்டு வெள்ளந்தி வேலைக்காரனை விரும்பி வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்கிறாள். இதை மிக கடுமையாக எதிர்க்கிறார்கள் அந்த பெண்ணின் அண்ணன்கள். அதன்பின்பு, நடப்பதே படத்தின் கதை ஆகும்.
தெலுங்கில் இதே படத்தை வெங்கடேஷ் கதாநாயகனாக நடிக்க மீனா கதாநாயகியாக நடிக்க எடுத்திருப்பார்கள். அந்த படத்தில் நாசர் ராதாரவியின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.





















