Israel Iran War: ”ஈரான் மேல பறப்போம், ஒன்னும் பண்ண முடியாது” இஸ்ரேலால் அணு ஆயுத ஒப்பந்தம் ரத்து
Israel Iran War: ஈரான் வான்பரப்பில் இஸ்ரேல் விமானங்கல் விரைவில் பறக்கும் என அந்நாட்டு தலைவர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

Israel Iran War: இஸ்ரேல் தாக்குதலால் ஈரானின் அணு ஆயுத பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
அணு ஆயுத திட்டம் சேதம்:
ஈரானின் அணு ஆயுத திட்டத்தால் தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி,அந்நாட்டின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. ஆப்ரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் நடத்திய தாக்குதலில், ஈரானின் அணுசக்தி உட்கட்டமைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரெல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகும் தெரிவித்துள்ளார். இன்னும் விரிவான தாக்குதல்கள் விரைவில் தொடங்கும் என்றும் எச்சரித்துள்ளார். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையேயான மோதல் போக்கு இந்த ஆயுத தாக்குதல்களால் மேலும் தீவிரமடைந்துள்ளது.
”ஈரான் மீது இஸ்ரேல் ராணுவ விமானங்கள்”
வீடியோ செய்தி ஒன்றில் பேசிய நேதன்யாகு, “இஸ்ரேல் ஈரானிய அணுசக்தி தளங்களைத் தாக்கியது மட்டுமல்லாமல், இந்தத் திட்டங்களை வழிநடத்தும் மூத்த விஞ்ஞானிகள் குழுவையும் நாங்கள் தாக்கினோம். இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணுசக்தி லட்சியங்களை பல ஆண்டுகளாக பின்னுக்குத் தள்ளிவிட்டன. பாலிஸ்டிக் ஏவுகணைகளிலிருந்தும் ஒரு பெரிய அச்சுறுத்தல் உள்ளது. அத்தகைய ஆயுதங்கள் இஸ்ரேலை அழிக்க நோக்கம் கொண்டவை. மிக விரைவில், நீங்கள் தெஹ்ரானின் வானத்திற்கு மேலே இஸ்ரேல் ராணுவ விமானங்களைக் காண்பீர்கள். அயதுல்லாக்களின் ஆட்சியின் ஒவ்வொரு இலக்கையும் நாங்கள் தாக்குவோம். நாங்கள் இதுவரை செய்தது ஆரம்பம் மட்டுமே" என்று அறிவித்ததாக டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவித்துள்ளது
ஈரான் பதிலடி
இஸ்ரேலிய தாக்குதல்களைத் தொடர்ந்து, சனிக்கிழமை அதிகாலை இஸ்ரேல் பகுதிகளின் மீது ஈரான் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது. டெல் அவிவ் மற்றும் தெஹ்ரானில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன, இது விரோதப் போக்குகளில் கூர்மையான அதிகரிப்பைக் குறிக்கிறது. அதிகரித்து வரும் பதட்டங்கள் இருந்தபோதிலும், இது நாங்கள் எதிர்பார்க்காதது கிடையாது என்று அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு நாட்களில் நடப்பதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்றும் கூறினார். ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ இலக்குகள் மீது இஸ்ரேல் கிட்டத்தட்ட 200 தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, ”இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்தால் ஈரானில் எதுவும் மிச்சமிருக்காது. எனவே அணு ஆயுத ஒப்பந்தத்தில் கையெழுத்திடுங்கள் என ஈரானை” ட்ரம்ப் எச்சரித்து இருந்தார்.
ஒப்பந்தம் ரத்து:
போர் பதற்றத்திற்கு மத்தியில் மஸ்கட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த ஆறாவது சுற்று அமெரிக்க-ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாக ஓமானி வெளியுறவு அமைச்சர் பத்ர் அல்புசைடி X இல் உறுதிப்படுத்தினார் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, பேச்சுவார்த்தைகளை "நியாயப்படுத்த முடியாதது" என்று ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கூறினார், ஆனால் பேச்சுவார்த்தை செயல்முறையிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறவில்லை.
ஈரானிலும் காசா எல்லையிலும் அதிகரித்து வரும் மோதல்கள், பரந்த பிராந்தியப் போரின் அச்சங்கள் தீவிரமடைந்து வருவதால், சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது.





















