மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இன்று வெளியாகிறது மக்களவை தேர்தல் தேதி.. கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது - இன்றைய ஹெட்லைன்ஸ்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் புதிதாக 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
- புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்து அரசாணை வெளியீடு.
- இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான சட்ட முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம் - ஓ. பன்னீர்செல்வம்.
- இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து மன்சூர் அலிகான் நீக்கம்.
- தமிழ்நாட்டில் தொடக்க, நடுநிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.
- மழையால் பாதிக்கப்பட்ட 7- கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளை மறுசீரமைப்பு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை.
- சர்வதேச கருத்தரங்கு, நிகழ்ச்சிகளில் மதுபானம் விநியோகிக்க புதிய நிபந்தனை வெளியிட்ட தமிழ்நாடு அரசு.
- சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை 44 புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு
- மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- எஸ்.வி.சேகர் மீதான தண்டனை நிறுத்தி வைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- விவசாயிகளை நாட்டின் முதுகெலும்பு என்று கூறும் மோடி தேர்தல் முடிந்தவுடன் விவசாயிகளை அடிமைகள் போல் பார்க்கிறார் - அய்யாக்கண்ணு
இந்தியா:
- மக்களவை தேர்தல் தேதி இன்று பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
- பாஜக மூத்த தலைவரான கே.எஸ்.ஈஸ்வரப்பா ஷிமோகா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட முடிவு.
- தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் மகள் கவிதா கைது.
- உலகை மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பிரதமர் மோடி வழிநடத்தி வருவதாக ராகுல் காந்தி காட்டம்.
- இலங்கை சிறையிலுள்ள காரைக்கால் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை தேவை - புதுச்சேரி முதலமைச்சர்.
- மத்திய பிரதேசம் சிங்ரவ்லி என்ற இடத்தில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 2.1 ஆக பதிவு.
- தேர்தல் பத்திரம் முறைகேடு அம்பலமாகியுள்ளதால் பாஜகவின் வங்கிக்கணக்கை முடக்க வேண்டும் - கார்கே.
- குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க செயலி அறிமுகம்.
- அமலாக்கத்துறை விசாரணைக்கும் ஆளுங்கட்சி பெற்ற தேர்தல் நிதிக்கும் சம்பந்தமில்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
- திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 எம்.பிக்கள் பாஜகவில் இணைந்தனர்.
உலகம்:
- சிஏஏவை நடைமுறைப்படுத்திய பிரதமர் மோடிக்கு அமெரிக்க பாடகி மேரி மில்பர்ன் புகழாரம்.
- காசாவில் இஸ்ரேல் படைகள் வான்வழித் தாக்குதல் - 21 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு.
- தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்; டிக்-டாக் செயலிக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம்.
- ஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்.
- அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்ற 3 இந்தியர்கள் உள்பட 4 பேர் கைது.
விளையாட்டு:
- ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அயர்லாந்து அணி அபார வெற்றி.
- மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இறுதிப்போட்டிக்குள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நுழைந்துள்ளது.
- என்னுடைய வாழ்வின் ஆரம்ப கட்டங்களில் நான் கேட்டரிங் வேலைக்குச் சென்றேன் என்று இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பேசியுள்ளார்.
- பதும் நிசங்கா அசத்தல் சதம்; 2வது ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தி இலங்கை வெற்றி.
- இந்தியா டி20 உலகக்கோப்பையை வெல்ல விராட் கோலி நிச்சயம் வேண்டும் - ஸ்ரீகாந்த்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
கல்வி
நிதி மேலாண்மை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion