மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: வெப்ப அலை - ஆரஞ்சு அலர்ட்.. டெல்லி கொல்கத்தா அணிகள் இன்று மோதல்.. முக்கியச் செய்திகள்..
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் மே 1 ஆம் தேதி வரை வட உள் தமிழக மாவட்டங்களில் வெப்ப அலை வீசும், ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்
- உதகையில் சிசிடிவி கேமிராக்களில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்ட விவகாரம், தேர்தல் அலுவலர் முன்னிலையில் முகவர்கள் ஸ்ட்ராங் ரூமை பார்வையிட்டனர்.
- செஸ் சாம்பியன் குகேஷ் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார், ஊக்கத்தொகையாக ரூ. 75 லட்சம் வழங்கினார் முதல்வர்
- பொன்னமராவதியில் ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் சட்டத்திற்கு புரம்பான செயல், 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை விட்டு ஒதுக்கிவைக்கப்பட்ட விவகாரம்
- சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கூரையில் தவறி விழுந்த குழந்தை, அக்கம் பக்கத்தினரின் தீவிர முயற்சியால் குழந்தை மீட்பு
- பாஜக பூத் ஏஜெண்டுகளுக்கு வழங்கப்படும் பணத்தில் மோசடி என மீண்டும் புகார், வெடிக்கும் மோதல்
- சென்னை ஆவடியில் சித்த மருத்துவர் மற்றும் அவரது மனைவி வீடு புகுந்து வெட்டிக்கொலை, வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை
- வெள்ளயங்கிரி மலையேறிய பக்தர் திடீர் உயிரிழப்பு: ஒரே மாதத்தில் 9 பேர் மரணம்
இந்தியா:
- தேர்தல் பரப்புரையில் அவுரங்கசீப் குறித்து கருத்து தெரிவித்து பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை பேச்சு, மோடி பேச்சு வெட்கக்கேடானது என காங்கிரஸ் பதில்
- குஜராத்தில் ரூ.602 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல், பாகிஸ்தானில் இருந்து கடத்தி வந்த 14 பேர் கைது
- பாலியல் விவகாரத்தில் சிக்கிய தேவகவுடா மக்ன் மீது சிறப்பு புலனாய்வு குழு வழக்கு பதிவு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதால் பாஜகவுக்கு நெருக்கடி
- கேரளா மாநிலத்தில் கன்னூர், திருச்சூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை மே 2 ஆம் தேதி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்தே காணப்படும்
- இந்தியக் கூட்டணி வெற்றி பெற்றால் ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று பிரதமர் கூட தேர்வு செய்வோம் என உத்தவ் தாக்கரே கட்சி சார்ந்த சஞ்சய் ராவத் பேச்சு
- உத்தரபிரதேசத்தில் அமேதியில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட ஸ்மிருதி இராணி
உலகம்:
- ஈராக்கில் ஓரிணச் சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை தண்டனை
- ஒக்லஹோமாவை புரட்டிப்போட்ட சூறாவளி புயல் - 2 பேர் உயிரிழப்பு
- ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதலை அமெரிக்கா மட்டுமே தடுத்து நிறுத்த முடியும் - பாலஸ்தீன ஜனாதிபதி பேச்சு
- இந்திய பயணத்தை தள்ளிவைத்த டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், திடீர் சீனா பயணம்
- பாலஸ்தீன கொடியை தொங்கவிட்ட போராட்ட குழுவினர் - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துக்கொண்ட நிகழ்ச்சியில் பரபரப்பு
விளையாட்டு:
- ஐபிஎல் 2024: ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை வெற்றி மற்றொரு ஆட்டத்தில் பெங்களூருவை வீழ்த்தி குஜராத் அசத்தல்
- ஐபிஎல் 2024: டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே இன்று போட்டி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion