மேலும் அறிய

ரம்ஜான் சிறப்பு தொழுகை; எதற்காக கொண்டாடப்படுகிறது ரம்ஜான்? - தெரிந்துக்கொள்ளுங்கள்..!

ரமலான் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை.

விழுப்புரம்: ரமலான் பண்டிகையை முன்னிட்டு விழுப்புரம் நகராட்சி பள்ளி மைதானத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகைகள் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான ரமலான் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான நாளில் இஸ்லாமியர்கள் பொது இடங்களில் ஒன்று கூடி பிரார்த்தனை செய்வது வழக்கம். இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள நகராட்சி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதே போன்று விழுப்புரம் மந்தகரை பள்ளிவாசல், வடக்கு தெரு பள்ளிவாசல், தற்கா தெரு பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இதேபோன்று மாவட்டத்தில் செஞ்சி, திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளிலும் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தொழுகை முடிந்து ஒருவரை ஒருவர் கட்டி அணைத்து தங்களுடைய வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக் கொண்டனர்.

ரம்ஜான் 

இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள இசுலாமியர்கள் நோன்பை அனுசரிக்கிறார்கள். இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூறும் விதமாக இந்த நோன்பை அனுபவிக்கிறார்கள். ஆண்டுக்கொரு முறை அனுசரிக்கப்படும் இந்த நோன்பு இசுலாத்தின் ஐந்து தூண்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்த மாதமானது நிலவின் பிறைக்காட்சியின் படியும், ஹதீஸ்களில் தொகுக்கப்பட்டுள்ள பல்வேறு வாழ்க்கை வரலாறுகளின்படியும் 29–30 நாட்கள் இருக்கலாம். நோன்பானது வயது வந்த இசுலாமியர்களுக்கு கட்டாயமான கடப்பாடு ஆகும்.

நோன்பு 

நோய்வாய்ப்பட்டவர்கள், பயணத்தில் உள்ளோர், வயது முதிர்ந்தோர், கர்ப்பிணிப் பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள், நீரிழிவு நோயாளிகள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் காலத்தில் உள்ளோர் ஆகியோர் மட்டுமே நோன்பிருப்பதிலிருந்து விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.

மக்காவில் இருந்து மதீனாவிற்கு இசுலாமியர்கள் குடியேறிய இரண்டாம் வருடத்தில், ஷப்பான் மாதத்தில் ரமலான் நோன்பு நோற்க வேண்டும் என்பது கட்டாயமான கடப்பாடாக இருந்தது. நள்ளிரவு சூரியன் அல்லது துருவ இரவு போன்ற இயற்கை நிகழ்வுடன் வாழும் முஸ்லிம்கள் மக்காவின் கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டும் என்று பத்வாக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆனால், பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்து என்னவென்றால், அந்தந்தப் பகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் பகலிலிருந்து இரவை வேறுபடுத்த இயலக்கூடிய நாளிலிருந்து தமக்கு நெருங்கிய நாட்டின் கால அட்டவணையை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

விடியற்காலையிலிருந்து சூரிய மறைவு வரை உண்ணாநோன்பு இருக்கும் போது, முஸ்லிம்கள் உணவு உட்கொள்ளல், நீர் மற்றும் திரவங்களை அருந்துதல், புகைபிடித்தல் மற்றும் பாலியல் உறவுகளில் ஈடுபடுதல் ஆகியவற்றைத் தவிர்த்து விடுகிறார்கள். 

தவறான பேச்சு (அவமதிப்பு, புறம்பேசுதல், சபித்தல், பொய் போன்றவை) மற்றும் சுய-பாதுகாப்புக் காரணங்களுக்காக அல்லாமல் பிறருடன் சண்டையிடுவது போன்ற பாவ காரியங்களில் ஈடுபட்டால் அவை நோன்பின் பலனைக் குறைத்து விடுமென்பதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவதிலிருந்தும் தங்கள் நடத்தையை தவிர்த்து விடுகிறார்கள். நோன்பு தொடங்குவதற்கு முன்னதாக எடுக்கப்படும் உணவானது ஸஹர் எனவும் நோன்பு முடிந்த பின் எடுத்துக் கொள்ளப்படும் உணவானது இப்தார் எனவும் குறிப்பிடப்படுகிறது. 

ரமலான் மாதத்தில், பொதுவாக பிரார்த்தனைகளை அதிகப்படுத்துதல், திருக்குர்ஆனைப் பாராட்டுதல், பாராது ஒப்புவித்தல் மற்றும் நல்ல செயல்களையும் தொண்டுகளையும் அதிகரித்தல் ஆகியவை அறிவுறுத்தப்படுகிறது.

தலைப்பு செய்திகள்

பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
பக்தர்களுக்கு உதவிய ‘பாகபலி’ ஞானாம்பிகை! தருமபுர தேரோட்டத்தில் நடந்த அற்புதம்.. பக்தர்கள் நெகிழ்ச்சி!
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
சோழநாட்டு திருச்செந்தூர் திருவிடைக்கழியில் வைகாசி சதயத் திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்! 
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
மயிலாய் மாறிய அன்னை வழிபட்ட தலம்: மின்விளக்கு ஒளியில் மிதந்த மயூரநாதர் - கண்கொள்ளாக் காட்சி!
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை
வெறும் சைக்கிளில் 12 ஜோதிர்லிங்க தரிசனம்! - 14 மாநிலங்கள் கடந்து திருப்பத்தூர் சிவபக்தர் செய்த அசாத்திய சாதனை

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: அண்ணாமலையும் இல்ல.. யாரை வச்சு தாமரைக்கு தண்ணி ஊத்துறது? புலம்பும் பாஜக
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
Sathyaraj: கட்டப்பா கண்ணீர் வடிக்கலாமா? சத்யராஜை கலாய்த்து தள்ளும் தவெக பாய்ஸ் - இணையத்தில் இதான் ட்ரெண்ட்
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
இந்தியா கூட்டணி சிதறிவிடக் கூடாது; திமுக பங்கேற்காதது வருத்தமளிக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி!
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
வாவ்.. வாட் எ லுக்.. ஸ்டைலும், கம்பீரமும் சேர்ந்த Royal Enfield Shortgun 650! விலை எவ்ளோ?
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
RBI வட்டி விகித அறிவிப்பு இன்று: ரெப்போ ரேட் குறித்து பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு!..
Embed widget