மேலும் அறிய

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!

மதுபான ஆலைகள் மற்றும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை அடிப்படையில், “டாஸ்மாக்கில் 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளதாகவும், பல்வேறு தனியார் நிறுவனங்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் இது செந்தில்பாலாஜிக்கு வைக்கப்பட்ட குறி என்ற தகவல் வெளியாகியுள்ளது.

டாஸ்மாக் மதுபான முறைகேடு தொடர்பாக கடந்த சில நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், தனியார்  மதுபான ஆலைகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது.  

இந்த நிலையில், டாஸ்மாக்கில் ரூ.1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகளில் நடந்த சோதனை தொடர்பாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.  டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, பார் லைசென்ஸ் டெண்டர்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

ஜி.எஸ்.டி., பான் கார்டு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளது அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ் கிறிஸ்டல் பாட்டில்ஸ். ஜி.எஸ்.ஆர். ஹோல்டிங் ஆகிய பாட்டிலிங் நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் 1000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாடுகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பது செந்தில் பாலாஜிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆயுத பூஜை எதிரொலி... தஞ்சையில் வாழை மரம், தோரணம், பூக்கள் விலை உயர்ந்தாலும் விற்பனை அமோகம்
ஆயுத பூஜை எதிரொலி... தஞ்சையில் வாழை மரம், தோரணம், பூக்கள் விலை உயர்ந்தாலும் விற்பனை அமோகம்
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
Chennai Rains: அலறிய செல்போன்கள்.. ரெடியா இருங்க சென்னை மக்களே.. மாலை கொட்டப்போகும் கனமழை!
தொடர் விடுமுறை எதிரொலி... அதிர்ந்தது தஞ்சை: பெரிய கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
தொடர் விடுமுறை எதிரொலி... அதிர்ந்தது தஞ்சை: பெரிய கோவிலில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..
மயிலாடுதுறையில் கொடூரம்; தந்தை கொலை... மூன்று மகள்கள் தாயுடன் கைது... அதிர்ச்சி பின்னணி..

வீடியோ

5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்
Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
CM Vijay: சென்னைக்கும் மழைக்கும் ஏழாம் பொருத்தம்..! வரலாற்றை மாற்றி அமைப்பாரா விஜய்? தீர்வு பிறக்குமா?
Chennai Rain: சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
சென்னைக்கு இன்றும் மிக கனமழை எச்சரிக்கை: NDRF வருகை - அவசர உதவி எண்கள் இதோ!
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Chennai Rain: இதுக்கு இல்லயா சார் ஒரு எண்ட்..! ஒருநாள் மழைக்கே மிதந்த சென்னை! TVK ஆட்சியிலாவது நிரந்தர தீர்வு கிடைக்குமா?
Deva:
Deva: "இன்னும் சாதிக்கலனு கவலைப்படாதீங்க.." இளைஞர்களுக்கு தேவா தந்த அட்வைஸ்! என்ன தெரியுமா?
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Anirudh - Kavya Marriage: மு.க.ஸ்டாலினுக்கு உறவினர் ஆகப்போகும் ரஜினிகாந்த்! இனிமே ஒன்னுக்குள்ள ஒன்னு!
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Chennai Rains: தண்ணீரில் தத்தளித்த தலைநகரம்.. சென்னையில் எந்த ஏரியாவில் எவ்வளவு மழை.?
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
Jailer 2: 3 நாளில் 300 கோடி.. தலைவரு நிரந்தரம்தான் போலயே..! கனமழையிலும் வசூல் மழையை அள்ளிய ஜெயிலர் 2!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! 655 கன அடியாக உயர்வு.. தற்போதைய நிலவரம் என்ன?
Embed widget