மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தர மறுத்த மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தெலஙகானாவில் அரங்கேறியுள்ளது.

மட்டன் சமைத்து தர மறுத்த மனைவியை கணவரே கொலை செய்த சம்பவம் தெலஙகானாவில் அரங்கேறியுள்ளது.
தெலுங்கானாவின் மஹபூபாபாத்தில் புதன்கிழமை, தனக்கு மட்டன் கறி சமைக்க மறுத்ததாகக் கூறி, ஆத்திரமடைந்த கணவர், தனது மனைவியை கொடூரமாக அடித்துக் கொன்றார்.
உயிரிழந்த மனைவி மாலோத் கலாவதி, 35 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இரவில் யாரும் இல்லாதபோது நடந்த சண்டையில், கலாவதி தனது கணவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அவரது தாயார் புகார் தெரிவிக்கிறார். வாக்குவாதம் வன்முறையாக மாறி, கலாவதியின் துயர மரணத்திற்கு வழிவகுத்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் மாலோத் கலாவதி என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இவர்கள் இருவருக்கு அடிக்கடி வீட்டில் சண்டை வந்த வண்ணம் இருக்குமாம்.
இந்நிலையில் கணவர் மனைவியிடம் மட்டன் கறி சமைத்து தருமாறு கேட்டுள்ளார். அதற்கு மனைவி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆத்திரமடைந்த கணவர் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது போக போக வன்முறையாக மாறியுள்ளது.
இதனால் கணவர் மனைவி கலாவதியை தாக்கியுள்ளார். இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசாருக்கு மனைவியின் தாயார் புகார் அளித்துள்ளார்.
சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். குற்றத்தின் விவரங்களை உறுதிப்படுத்தவும், ஆதாரங்களை சேகரிக்கவும் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
ஒரு அற்ப விஷயத்துக்கு இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவது மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே குடும்ப வன்முறை நாட்டில் தலைவிரித்தாடுகிறது. இதில் இதுபோன்ற சம்பவங்கள் அவற்றை நினைவு படுத்தாமல் இல்லை. இந்த சம்பவம் விழிப்புணர்வு மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகளின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

