மேலும் அறிய

Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்

அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

 

அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? என முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜெயக்குமார், “மத்திய அரசுக்கு கொத்தடிமையாக இருக்கிறது திமுக அரசு. மாநில உரிமையை யார் தாரை வார்த்தது என நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் ஸ்டாலின் தயாரா? கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? 4 ஆண்டுகளில் திமுக அரசு 4 கோடியே 18 லட்சம் கடன் வாங்கியுள்ளது.

உரிமைகளை மத்திய அரசிடம் தாரைவார்த்தது திமுக தான். மத்தியில் ஆட்சியில் இருந்தபோதே திமுக கல்வியை மாநில பட்டியலுக்குள் கொண்டு வந்திருக்கலாம்.

மத்திய அரசுக்கு சொம்பு தூக்கவும் ஒத்து ஊதவும் திமுக செயல்படுகிறது. எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி விடுத்த சவாலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் பதில் சொல்ல வேண்டும்.

எங்கள் முதலமைச்சருக்கு எல்லாம் தெரியும் என சொல்பவர்கள் ஏன் விவாதத்திற்கு வர மறுக்கிறார்கள். அமைச்சர் ரகுபதிக்கு மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? ” என கேள்வி எழுப்பினார்.

 

முன்னதாக எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ், தனது எக்ஸ் தளத்தில், “டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார் மு.க.ஸ்டாலின்?

கல்லக்குடியில் ரயில் வராத தண்டவாளமாகப் பார்த்து தலை வைத்ததில் தொடங்கிய நாடக வரலாறு , இன்று வரை துரோக சரித்திரமாக நீண்டுகொண்டு இருக்கிறது.

கட்சி தோற்றுவிக்கப்பட்டதன் அடிப்படை நோக்கத்தையே மறந்துவிட்டு இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸ் கட்சியோடு

கைகோர்த்தது முதல், இன்றைக்கு கொல்லைப்புறமாக PM Shri திட்டத்தை முதலில் வரவேற்றுவிட்டு, தற்போது எதிர்ப்பு நாடகம் ஆடும் திமுகவிற்கு அதிமுக பற்றி பேச எள்ளளவாவது அருகதை இருக்கிறதா?

நீட் என்ற சொல்லையே நாட்டிற்கு அறிமுகப்படுத்தியதே திமுக- காங்கிரஸ் கூட்டணி தானே?

அப்படி என்ன ஆட்சி செய்து கிழித்து விட்டீர்கள் என்று மேடையில் முதல்வர் ஸ்டாலின் வீரவசனம் பேசுகிறீர்கள்? எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் கேட்கிறேன். உங்களால் என்னுடன் நேருக்கு நேர் நின்று தனியாக விவாதிக்க முடியுமா?  அந்த தெம்பு, திராணி உங்களுக்கு இருக்கிறதா? எத்தனை துண்டு சீட்டுகள் வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி “நாங்கள் எந்த வகையிலும் டெல்லிக்கு அடங்கி போவதுமில்லை. அடமானம் வைப்பதும் இல்லை. இந்தியாவிலேயே டெல்லிக்கு எதிராக முதல் குரல் எழுப்புவது தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தான். டெல்லியில் அடமானம் வைக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.

எங்களுக்கு சொந்த புத்தி  உண்டு. சொந்த கால்களில் நிற்கும் சக்தி உண்டு. சொந்த மண்ணை காப்பாற்றும் திறமையும் எங்களுக்கு உண்டு. நாங்கள் செய்த சாதனையை பட்டியல் போட்டு சொல்கிறோம். அதில் என்ன பொய் என்று அவர் கூறட்டும். அதற்கு அப்புறம் விவாத மேடையை வைத்துக் கொள்வோம்” எனத் தெரிவித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
3,575 சதுர மீட்டர்...10 ஆயிரம் மரக்கன்றுகள் திருச்சியில் உருவாகிறது அடர்ந்த ‘மியாவாக்கி’ குறுங்காடு!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்
400 தவெக வாக்குறுதிகளில் 40 கூட நிறைவேற்றப்படலை; ஆசிரியர்கள் எண்ணிக்கை குறைப்பா? அன்புமணி விமர்சனம்
வெயில் விடுமுறை கேட்கிறது… மழை இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறது!” தஞ்சையின் இன்றைய வானிலை இதுதாங்க
வெயில் விடுமுறை கேட்கிறது… மழை இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறது!” தஞ்சையின் இன்றைய வானிலை இதுதாங்க

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
வெளியான 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள்; மார்க் ஷீட் பெறுவது எப்படி? மறுகூட்டல், மறுமதிப்பீடு விவரம்!
TN Budget 2026: தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவுகள் - பட்ஜெட்டில் எவ்வளவு துண்டு விழுந்தது? கடன் விவரங்கள்
TN Budget 2026 : ‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் விஜயின் வாக்குறுதிகள் என்னென்ன இடம்பெறவில்லை..?
‘இல்லை, இல்லை’ பட்ஜெட்டில் இடம்பெறாத தவெக வாக்குறுதிகள்..!
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
TN Budget 2026: பட்ஜெட்டில் பள்ளி, உயர் கல்வித்துறை நிதி குறைப்பு; மாணவர்களுக்கு ஷாக்! பெரும் பின்னடைவு?
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
North Korea Heatwave: “வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
“வெப்ப அலைல சிக்காம தப்பிக்கணும்னா, நாய் சூப் சாப்பிடுங்க“ - மக்களுக்கு அட்வைஸ் கொடுத்த அதிபர் யார்.?
MG Hector Hawk: மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
மஹிந்திரா XUV 7XO-க்கு சங்கு ஊதுமா MG Hector Hawk; பிளக்-இன் ஹைப்ரிட், EV பதிப்புகளில் அறிமுகம்
Embed widget