செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியுள்ளது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் பகீர் கிளப்பும் ஊழல்:
ED, Chennai has conducted search operations at various premises across many districts of Tamil Nadu on 06.03.2025 under the provisions of PMLA, 2002, for various offences related to Tamil Nadu State Marketing Corporation Limited (TASMAC) and its associated entities/persons.…
— ED (@dir_ed) March 13, 2025
திட்டமிட்டு செலவுகளை அதிகப்படுத்தியும் விற்பனை புள்ளிவிவரங்களை உயர்த்தியும் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
டாஸ்மாக்கில் மது பாட்டில்களை கொண்டு செல்வதற்கான போக்குவரத்து டெண்டர் மதிப்பு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய். இதில் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல, பார் லைசென்ஸ் டெண்டர்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
ஜி.எஸ்.டி., பான் கார்டு இல்லாத விண்ணப்பதாரர்களுக்கும் டெண்டர் தரப்பட்டுள்ளது அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
எஸ்.என்.ஜே., கல்ஸ், அக்கார்டு, சைப்ல், ஷிவா டிஸ்டிலரி ஆகிய மது உற்பத்தி ஆலைகள், தேவி பாட்டில்ஸ் கிறிஸ்டல் பாட்டில்ஸ். ஜி.எஸ்.ஆர். ஹோல்டிங் ஆகிய பாட்டிலிங் நிறுவனங்களிலும் முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், எந்த அரசு கணக்கிலும் சேராமல் 1000 கோடி ரூபாய் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கடி:
ஏற்கனவே, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாடுகள் நிலுவையில் உள்ளன. இதுதொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், டாஸ்மாக்கில் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை தெரிவித்திருப்பது செந்தில் பாலாஜிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
ஒரு மது பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்பட்டது அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. டாஸ்மாக்கில் நடந்துள்ள ஊழலை மறைக்கவே தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கையில் எடுத்திருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிக்க: JEE Main with CBSE: அதிர்ச்சி.. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நாளிலேயே ஜேஇஇ மெயின் தேர்வுகள்!





















