மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல்.. இன்றைய தலைப்பு செய்திகள்!
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.
தமிழ்நாடு:
- தமிழக சட்டப்பேரவையில் உரையை படிக்காமல் புறக்கணித்தார் ஆளுநர் ஆர்.என்.ரவி; உண்மைக்கு புறம்பாக இருந்ததாக குற்றச்சாட்டு
- சட்ட விரோத பணப் பரிவர்த்தனை தடைச் சட்டத்தில் கைதாகி சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
- சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி மகனின் உடல் 8 நாட்களுக்கு பிறகு சட்லஜ் நதியில் இருந்து மீட்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
- பேருந்து நிலையத்தில் வசதிகளை காண்பிக்கிறோம்; கிளாம்பாக்கத்துக்கு இபிஎஸ் வர தயாரா..? அமைச்சர் சிவசங்கர் சவால்
- குடியுரிமை திருத்த சட்டத்தை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் - ஆளுநர் உரையில் தமிழ்நாடு அரசு உறுதி
- பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி - விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு
- மக்களவைத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுகவுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
- தென் மாநிலங்களில் இருக்கக்கூடிய ஆளுநர்களின் திருவிளையாடல்கள் எல்லாம் அங்கிருக்கக்கூடிய அரசாங்கங்களுக்கு எதிராக உள்ளன, என அமைச்சர் ரகுபதி சாடியுள்ளார்.
- பிப்ரவரி 22 ஆம் தேதி வரை சட்டப்பேரவை நடைபெறும் - சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
இந்தியா:
- பீகாரில் அந்த மாநில சபாநாயகருக்கு எதிராக ஆளுங்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளது.
- பீகார் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 129 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் நிதிஷ்குமார் அரசு வெற்றி
- விவசாயிகள் போராட்டத்தை தடுக்கும் நோக்கில் டெல்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை கும்பலாக சேருவதற்கு தடை விதிக்கும் விதமாக 144 தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
- சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றியின் உடல் 8 நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் பயன்படுத்தப்படும் பணிப்பரிவர்த்தனைக்கான யுபிஐ சேவை, தற்போது எந்தெந்த நாடுகளில் செயல்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- முள்வேலி அமைத்து தடுக்க போலீஸ் முயற்சி; டெல்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி - விவசாய சங்க முக்கிய தலைவர்கள் கைது
- கத்தார் நாட்டில் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியாவின் முன்னாள் 8 கடற்படை அதிகாரிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
உலகம்:
- பிரதமர் மோடி இன்று அமீரகத்திற்கு பயணம்: அபுதாபியில் இந்து கோயிலை திறந்து வைக்கிறார்.
- புதிய நாடாளுமன்றத்தில் இரு பொறுப்பான எதிர்க்கட்சியாக பி.டி.ஐ. செயல்படும் என இம்ரான் கட்சி அறிவித்துள்ளது.
- பணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல் - 50 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
- அமெரிக்காவின் உள்ள சர்ச்சில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம பெண் சுட்டு கொலை
- குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்யும் புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது மடகாஸ்கர் நாடாளுமன்றம்.
விளையாட்டு:
- சென்னையில் நடைபெற்ற ரஞ்சிக் கிரிக்கெட்டில் தமிழ்நாடு கர்நாடகா அணிகளுக்கு இடையிலான போட்டி டிராவில் முடிந்துள்ளது.
- இந்தியா அணி வீரரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியவருமான செளரப் திவாரி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
- டி20 சர்வதேச போட்டிகளில் அதிக சதம் அடித்து இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் உலக சாதனையை மேக்ஸ்வெல் சமன் செய்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion