Shruthi Narayanan : எது உண்மை? எது பொய்? இணையத்தில் கசிந்த வீடியோ பற்றி ஸ்ருதி நாராயணன்
Shruthi narayanan : இணையத்தில் பரவி வரும் ஆபாச பட வீடியோ குறித்து நடிகை ஸ்ருதி நாராயணன் இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

ஸ்ருதி நாராயணன்
சிறகடிக்க ஆசை தொடரின் நடிகை ஸ்ருதி நாராயண் தொடர்பான ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. திரைப்பட வாய்ப்பிற்காக ஸ்ருதி நாராயணன் இந்த செயலில் ஈடுபட்டதாக பலர் தெரிவித்து வந்த நிலையில் இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்ருதி பதிவிட்டுள்ளார்.
ஸ்ருதி நாராயணன் விளக்கம்
கடந்த சில நாட்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட்டில் வைத்திருந்த ஸ்ருதி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். இதில் அவர் நிஜத்திற்கு ஏ ஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவுக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிப்பது பற்றி அவர் தெரிவித்துள்ளார். ஸ்ருதி நாராயணனின் வீடியோ என்று இணையத்தில் பரவி வரும் வீடியோ ஐ மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என அவர் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

