IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?
IPL 2025 LSG vs SRH: லக்னோ அணிக்கு எதிராக பேட்டிங்கைத் தொடங்கிய சன்ரைசர்ஸ் அணி இமாலய இலக்கை நிர்ணயிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 18வது சீசனின் 7வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
ரன் வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்?
முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்கிய சன்ரைசர்ஸ் இந்த போட்டியிலும் வெற்றியைத் தொடர முழு வேகத்துடன் களமிறங்கியுள்ளது. முதல் போட்டியில் தோல்வியை கண்ட லக்னோ அணி இந்த போட்டியில் வெற்றி பெற முழுமூச்சில் களமிறங்கியுள்ளது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது. ஏற்கனவே இந்த மைதானத்தில் நடந்த போட்டியில் சன்ரைசர்ஸ் அணி 286 ரன்களை குவித்தது. இதனால், இன்றைய போட்டியிலும் சன்ரைசர்ஸ் அணி ரன் வேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேட்டிங் பட்டாளம்:
சன்ரைசர்ஸ் அணியில் பேட்டிங் பலம் வலுவாக உள்ளது. தொடக்க வீரர்கள் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அபினவ் மனோகர் பேட்டிங்கில் பலமாக உள்ளனர்.
லக்னோ அணியில் மார்க்ரம், நிகோலஸ் பூரண், ரிஷப்பண்ட், டேவிட் மில்லர், பதோனி, சமத், உள்ளனர். கடந்த போட்டியில் ஜொலிக்காத கேப்டன் ரிஷப்பண்ட் இந்த போட்டியில் கட்டாயம் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும்.
லக்னோ வெற்றி பெறுமா?
சன்ரைசர்ஸ் அணியில் பந்துவீச்சில் முகமது ஷமி, ஹர்ஷல் படேல், சிமர்ஜித் சிங், கம்மின்ஸ் உள்ளனர். லக்னோ அணியில் ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ் உள்ளனர்.
லக்னோ அணியை காட்டிலும் சன்ரைசர்ஸ் அணி மிகவும் பலமாக உள்ளது. இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கும் கடினமான இலக்கை லக்னோ அணி எட்டிப்பிடிக்குமா? என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
ப்ளேயிங் லெவன்:
சன்ரைசர்ஸ் ஹைதரபாத்;
அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் ரெட்டி, கிளாசென், அனிகெட் வர்மா, அபினவ் மனோகர், கம்மின்ஸ், சிமர்ஜித் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
மார்க்ரம், பூரண், ரிஷப்பண்ட், டேவிட் மில்லர், பதோனி, அப்துல் சமத், ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்

