KKR vs RCB: 17 ஆண்டுகள் தீராத வலி... மீண்டும் மோதும் RCB-KKR! 2008-ல் நடந்தது என்ன?
KKR vs RCB: 2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் முதல் போட்டியில் மோதின

18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கொல்கத்தாவில் இன்றிரவு பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
ஐபிஎல் 2025:
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 18வது சீசன் இன்று தொடங்குகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ரவுண்ட் ராபின் முறையில் நடைப்பெறும், ஒவ்வொரு அணியும் தலா 14 போட்டிகளில் விளையாட வேண்டும், லீக் சுற்றின் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
17 ஆண்டுகளுக்கு பிறகு:
2008-ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டத்தில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்னதாக ஐபிஎல் தொடரின் முதல் சீசனின் முதல் போட்டியில் மோதின, அந்த போட்டியை இன்று வரை யாராலும் மறக்க முடியாது. இந்திய ரசிகர்களுக்கு அப்போது பெரிதும் பரிச்சயம் இல்லாத டி20 போட்டிகள் மூலம் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த சரித்திரமிக்க ஐபிஎல்-லின் முதல் போட்டியில் டாஸில் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது, கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரண்டன் மெக்கலம் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோர் களமிறங்கினர்.
மெக்கலம் அதிரடி:
ஐபிஎல்-லின் முதல் போட்டியிலேயே சர வெடியாய் வெடித்தார் பிரண்டன் மெக்கலம், பெங்களூரு அணி பந்து வீச்சாளர்களை நையப்புடைத்து எடுத்தார் மெக்கலம், முதல் போட்டியிலேயே அதிரடியாக சதம் விளாசினார் பிரண்டன் மெக்கலம் , 53 பந்துகளில் சதத்தை எட்டினார், சதத்திற்கு பிறகு தனது அதிரடியைப் மெக்கலம் விட்டப்பாடில்லை, முதல் போட்டியில் 150 ரன்களை அடித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.
Since another IPL season begins today, let's go to the beginning of the IPL through a thread on the story behind Baz's 158*. 🧵
— TheRandomCricketPhotosGuy (@RandomCricketP1) March 26, 2022
When Brendon Mccullum was bought in the first ever IPL for a big price tag of $700,000, not a lot of people thought he would go on to have the kind of pic.twitter.com/lumlYOyg98
மெக்கலம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 158 ரன்கள் குவித்தார் இதில் 10 பவுண்டரிகள் மற்றும் 13 சிக்சர்கள் அடங்கும், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் குவித்தது, இமாலய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தப்போட்டியில் கொல்கத்தா அணிப 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
Brendon McCullum’s 158 – The Knock That Launched the IPL🔥
— "Cricket ++" feat. Raj (@cricplusplus) March 16, 2025
With IPL 2025 around the corner, it’s time to look back at the most defining innings in IPL history. And nothing comes close to Brendon McCullum’s iconic unbeaten 158* off 73 balls in the very first IPL match in 2008.… pic.twitter.com/9QzqvCIdHc
பழி வாங்குமா ஆர்சிபி:
இதன் பிறகு தற்போது தான் இரு அணிகளும் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மோதவுள்ளது, 17 ஆண்டுகளுக்கு முன்பு அடைந்த தோல்விக்கு இன்றைய போட்டியில் பெங்களூரு அணி பழி வாங்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மேலும் அந்த போட்டியில் விளையாடிய ஒரே வீரரான விராட் கோலி இன்றைய போட்டியில் களமிறங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

