மேலும் அறிய

கோடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு நேரில் ஆஜரானார் சுதாகரன்

கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட சமயத்தில், அதன் பங்குதாரர்களில் ஒருவராக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்தார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக, மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் கோவை சிபிசிஐடி போலீசார் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு கொள்ளைச் சம்பவம் நடந்தது. இதில், எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக முதலில் உதகை போலீசார் விசாரித்து சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான கனகராஜ், சம்பவம் நடந்த சில நாட்களில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார்.

கோடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு நேரில் ஆஜரானார் சுதாகரன்

பின்னர், இந்த வழக்கு மேற்கு மண்டல ஐஜி தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழுவுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தினர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், இந்த வழக்கு கோவை மாவட்ட சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி மாதவன், கூடுதல் எஸ்.பி முருகவேல் தலைமையிலான சிபிசிஐடி போலீசார் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

IPL 2025 LSG vs SRH: மீண்டும் ரன்வேட்டை நடத்துமா சன்ரைசர்ஸ்? முதல் வெற்றியை ருசிக்குமா பண்ட் படை?

இந்த வழக்கு தொடர்பாக முன்னரே கைது செய்யப்பட்டவர்கள், சந்தேகத்துக்குரியவர்கள், சாட்சிகள் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் விடுத்த கோரிக்கை, அது தொடர்பாக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் அடிப்படையில், சந்தேகத்துக்குரிய 18 பேரிடம் போலீசார் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதாவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின், முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு 27-ம் தேதி (இன்று) விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

'நீ போ, நான் குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன்': காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவர்!
கோடநாடு கொலை வழக்கு: விசாரணைக்கு நேரில் ஆஜரானார் சுதாகரன்

அதனடிப்படையில் சுதாகரன் காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜரானார். கோடநாடு எஸ்டேட் வாங்கப்பட்ட சமயத்தில், அதன் பங்குதாரர்களில் ஒருவராக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் இருந்தார். கோடநாடு எஸ்டேட்டில் இருந்த ஆவணங்கள், பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாக அவரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
மதுரை சொத்துவரி முறைகேடு: முன்னாள் மண்டலத்தலைவர் கணவர் சரவணன் கைது.. பழிவாங்குவதாக குற்றச்சாட்டு!
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
OBC, EBC & DNT Students... கல்வி உதவித்தொகைக்கு சூப்பர் வாய்ப்பு மிஸ் பண்ணாதீங்க !
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!
நவராத்திரி கொலுவில் தலைவரின் 230 படங்கள்... மதுரை ரசிகரின் பிரம்மாண்ட பக்தி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget