Accident : கிரிக்கெட் வீராங்கனைகள் சென்ற பேருந்து விபத்து..! அச்சச்சோ.. என்னாச்சு..?
பரோடா மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் சென்ற பேருந்து விசாகப்பட்டினத்தில் விபத்திற்குள்ளாகியதில் 5 வீராங்கனைகள் காயமடைந்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தில் பரோடா மகளிர் கிரிக்கெட் அணியின் பேருந்து விபத்துக்குள்ளானது.
விசாகப்பட்டினத்தில் விபத்து
விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற டி20 போட்டிக்குப் பிறகு வீராங்கனைகளை ஏற்றிக்கொண்டு பேருந்து விமான நிலையத்துக்குச் சென்று கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தாடி செட்லபாலம் தேசிய நெடுஞ்சாலையில், அவர்களுக்கு முன்னால் சென்ற லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.
மருத்துவமனையில் சிகிச்சை
குழு மேலாளருடன் சேர்த்து குறைந்தது ஐந்து வீராங்கனைகள் காயங்களுக்குள்ளானதாக அறிக்கைகள் மேலும் தெரிவித்தன. சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சரபாளையம் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பரோடா அணியின் லீக் சுற்று பயணம்
பரோடா அக்டோபர் 11 அன்று விதர்பாவுக்கு எதிராக தங்கள் சீசனைத் தொடங்கியது. அவர்களிடம் முதல்போட்டியில் தோல்வியை சந்தித்த நிலையில் மீண்டும் சத்தீஸ்கருக்கு எதிராக தோல்வியைத் தழுவினர். பின்னர் பாண்டிச்சேரிக்கு எதிராக முதல் வெற்றியைப் பதிவு செய்தது. பின்னர் மீண்டும் மும்பையிடம் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு, பெங்கால் மற்றும் சவுராஷ்டிராவுக்கு எதிரான வெற்றிகளுடன் லீக் ஆட்டங்களை முடித்தது.
View this post on Instagram
சீனியர் மகளிர் டி20 லீக்
சீனியர் மகளிர் டி20 லீக்கின் 14வது பதிப்புடன் சீனியர் பெண்களுக்கான இந்திய உள்நாட்டு கிரிக்கெட் சீசன் அக்டோபர் 11 அன்று தொடங்கியது. இம்முறை மொத்தம் 129 ஆட்டங்கள் கொண்ட இந்தப் போட்டியின் இறுதிப் போட்டி பெங்களூரில் நடைபெறும். சீனியர் மகளிர் டி20 டிராபியில் உள்ள 37 அணிகள் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதலிடம் பிடிக்கும் அணிகள் நேரடியாக காலிறுதிக்குத் தகுதி பெறும் மற்றும் 2வது இடத்தைப் பிடிக்கும் அணிகள் 6-10 என்ற தரவரிசையில் இருக்கும்.
புள்ளிகள், வெற்றிகள், நெட் ரன் ரேட் அடிப்படையில் குழுக்கள் முழுவதும் மீதமுள்ள அணிகளில் முதல் தரவரிசையில் இருக்கும் அணிகள் காலிறுதிக்கு முந்தைய போட்டியில் விளையாடும். 6 vs 11, 7 vs 10 மற்றும் 8 vs 9 அணிகள் காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தில் விளையாடும் மற்றும் வெற்றியாளர்கள் 6, 7 மற்றும் 8 அணிகளாக காலிறுதியில் விளையாடுவார்கள். லீக்-நிலை ஆட்டங்கள் இன்றோடு முடிவடையும் நிலையில், நாக் அவுட் போட்டிகள் அக்டோபர் 30 முதல் நவம்பர் 5 வரை நடைபெறும்.