சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பணம் குவிப்பு: கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரிப்பு! அதிர்ச்சியில் இந்தியா?
Swiss Bank Deposit: ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய டெபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து 37 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Swiss Bank Black Money Latest News: ஸ்விட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய டெபாசிட், கடந்த ஆண்டில் 3 மடங்கு அதிகரித்து 37,600 கோடி ரூபாயாக ஆக உள்ளது. சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகள் டெபாசிட், 11% அதிகரித்து 3,675 கோடி ரூபாயாக இருக்கிறது.
சுவிட்சர்லாந்து வங்கிகள் - Swiss Bank
உலக அளவில் சுவிஸ் வங்கிகள் பிரபலமான வங்கியாக இருந்து வருகிறது. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளுக்கு பல்வேறு சலுகைகளை அந்த நாடு வழங்குகிறது. குறிப்பாக சுவிஸ் வங்கிகளில், பணம் டெபாசிட் செய்பவர்களின் ரகசியம் காக்கப்படுகிறது. ஒரு நாட்டில் வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோதமாக பணத்தை பதுக்க வேண்டும் என்றால், பலரது முதல் சாய்ஸ் சுவிஸ் வங்கியாக தான் இருந்து வருகிறது.
இந்தியாவும் சுவிஸ் வங்கிகளும்
சுவிட்சர்லாந்து நாட்டின் நிலையான பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல்கள் அங்கு பணத்தைக் கொண்டு சென்று, பதுக்கி வைப்பதற்கு ஏற்ற இடமாக இருந்து வருகிறது. உலக அளவில் பணத்தை ரகசியமாக பதுக்கி வைக்க, சுவிஸ் வங்கிகள் சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகள் மீது உள்ள விமர்சனத்தால், சற்று வெளிப்படை தன்மையுடன் வங்கிகள் செயல்பட தொடங்கி உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என பலதரப்பட்டோர் சுவிஸ் வங்கியில் கணக்கு வைத்திருப்பதாக, பல்வேறு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரசியல்வாதிகளில் பணங்கள் சுவிஸ் வங்கியில் கருப்பு பணமாக இருப்பதாக, குற்றச்சாட்டு நீண்ட காலமாக இருந்து வருகின்றன. அந்த வகையில், சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்திய, டெபாசிட் கடந்த ஆண்டில் மூன்று மடங்கு அதிகரித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
37,600 கோடி டெபாசிட்
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள இந்திய பணத்தின் மதிப்பு ஒரே ஆண்டில், 3 மடங்கு உயர்ந்து 2024-இல், ரூபாய் 37 ஆயிரத்து 600 கோடி ரூபாயாக உள்ளதாக அந்த நாட்டின் தேசிய வங்கி அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இதில் தனிநபர் கணக்கு கொண்டுள்ளவர்களின் பணம் மொத்தமாக, 3675 கோடி உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதில் பெரும்பாலான தொகை வங்கிகள், நிதி நிறுவனங்களில் கணக்குகளிலே வைத்திருப்பதாக, சுவிட்சர்லாந்து தேசிய வங்கி அறிக்கை சமர்ப்பித்துள்ளது. கடந்த ஆண்டில், சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கிகளில் இந்தியர்களின் தனிநபர் கணக்குகள் 11% மட்டுமே அதிகரித்திருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தனி நபர்களின் பங்களிப்பு
சுவிட்சர்லாந்து வங்கிகளில் உள்ள மொத்த இந்திய டெபாசிட்களில், இந்திய தனி நபரின் பங்களிப்பு பத்தில் ஒரு பங்காக இருக்கிறது. 2006-இல் இந்திய மொத்த டெபாசிட் தொகை, 6.50 லியன் ஸ்வீஸ் பிராங்காக இருந்த நிலையில், தொடர்ந்து பல்வேறு ஆண்டுகள் இது வீழ்ச்சி அடைந்து வருகிறது. ஒரு சில ஆண்டுகள் மட்டுமே டெபாசிட் தொகை உயர்ந்து வருவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அதிக தொகை வைத்துள்ள நாடுகள் ?
சுவிட்சர்லாந்து வங்கிகளில் அதிக தொகை வைத்துள்ள நாடுகள் வரிசையில் பிரிட்டன் முதலிடம் பிடித்துள்ளது. இதற்கு அடுத்த இடத்தில் அமெரிக்கா இரண்டாம் இடம் பிடித்திருக்கிறது. அதுக்கு அடுத்த இடங்களில் மேற்கிந்திய தீவுகள், ஜெர்மன், பிரான்ஸ், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. சிங்கப்பூர், யு.ஏ.இ.., உள்ளிட்டு நாடுகளும் அடுத்தடுத்த இடங்களை பிடித்திருக்கின்றன.























