Donald Trump: அப்பாடா.! ஒரு வழியாக அதை ஒப்புக்கொண்ட ட்ரம்ப் - அப்போ இவ்ளோ நாள் பொய் தான் சொன்னீங்களா.?
இவ்வளவு நாட்கள் ஒரு விஷயத்தை தான் தான் செய்ததாக சொல்லி வந்த ட்ரம்ப், தற்போது முதல் முறையாக அதை மாற்றி கூறியுள்ளார். அதாவது ஒப்புக்கொண்டுள்ளார். அது என்ன விஷயம் தெரியுமா.?

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தத்திற்கு தானே காரணம் என இவ்வளவு நாள் கூறி வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், முதன் முறையாக அந்த கூற்றை மாற்றியுள்ளார். இது குறித்து அவர் என்ன கூறியிருக்கிறார் என்று பார்க்கலாம்.
“இந்தியா-பாகிஸ்தான் போர் மூள்வதை இருநாட்டு புத்திசாலி தலைவர்களும் நிறுத்தினர்“
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், நேற்று முன்தினம் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனிருக்கு வெள்ளை மாளிகையில் மதிய விருந்தளித்து, பின்னர் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு பேசிய ட்ரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே மூள இருந்த அணு ஆயுதப் போரை, இரு நாட்டின் மிகவும் புத்திசாலியான தலைவர்கள் தடுத்து நிறுத்தி விட்டதாக கூறியுள்ளார்.
அசிம் முனிரை சந்தித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், அவருடன் ஈரான் - இஸ்ரேல் போர் தொடர்பான சூழ்நிலை குறித்து பேசியதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு, பாகிஸ்தான் ராணுவ தளங்களை பயன்படுத்த அமெரிக்கா யோசித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், ட்ரம்ப்பின் இந்த கூற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இதனிடையே, தொலைபேசி வாயிலாக பேசியதை சுட்டிக்காட்டி, இந்திய பிரதமர் மோடியையும் ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்வது குறித்து பேசி வருவதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம், வெள்ளை மாளிகையில், இந்திய பிரதமர் மோடியுடன் பேசியதையும் நினைவுகூர்ந்தார் ட்ரம்ப்.
மிகவும் புத்திசாலிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்கள், அணு ஆயுதப் போராக உருவெடுக்க இருந்த போரை கைவிட முடிவெடுத்தார்கள் என்று ட்ரம்ப் பாராட்டியுள்ளார். இரு நாடுகளும் மிகப் பெரிய அணு ஆயுத நாடுகள் என்றும், இரு நாட்டின் தலைவர்களாலும் அது தடுத்து நிறுத்தப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இதுநாள் வரை என்ன கூறி வந்தார் ட்ரம்ப்.?
கடந்த மாதம் 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் நீடித்து வந்தது, இந்நிலையில் 10-ம் தேதி திடீரென இரு நாடுகளும் தாக்குதல்களை நிறுத்தின. இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதை, ட்ரம்ப் தான் தனது சமூக வலைதள பக்கம் மூலமாக அறிவித்தார்.
அதில், இரு நாடுகளுக்கும் இடையே தானே மத்தியஸ்தம் செய்ததாகவும், வர்த்தகத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியதால், இரு நாடுகளும் தாக்குதல்களை கைவிட ஒப்புக்கொண்டதாகவும் கூறியிருந்தார் ட்ரம்ப். ஆனால், இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் கெஞ்சி கேட்டதாலேயே தாக்குதலை நிறுத்த இந்தியா ஒப்புக்கொண்டதாக கூறியது.
ஆனால், இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், செயலாளர், பின்னர் பிரதமர் மோடி என, அனைவருமே மத்தியஸ்தம் நடைபெறவில்லை என கூறிய நிலையிலும், பல்வேறு இடங்களில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா-பாகிஸ்தான் இடையே மூள இருந்த அணு ஆயுதப் போரை தான் பேசி தடுத்துவிட்டதாகவே கூறிவந்தார். நேற்று முன்தினம், பாகிஸ்தான் ராணுவ தலைவரை சந்திக்கும் முன்பு வரை ட்ரம்ப் அதையே கூறிவந்தார்.
இந்நிலையில் தான், தற்போது முதன் முறையாக, இந்தியா - பாகிஸ்தான் தலைவர்கள் போரை நிறுத்தியதாக ஒப்புக்கொண்டுள்ளார் ட்ரம்ப். ஆனாலும் அவரை நம்ப முடியாது. வரும் நாட்களில் என்ன கூறுகிறார் என்று பார்க்கலாம்.





















