தமிழகத்தை காக்கும் கடவுளாக முதல்வர் ஸ்டாலின்... ஆனால், எடப்பாடியோ..? - சீறிய அமைச்சர் சேகர்பாபு
சேலத்திற்கும் சென்னைக்குமான அரசியல் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் - எடப்பாடி பழனிசாமி குறித்து விமர்சனம் செய்த சேகர்பாபு
அறிவாலயத்தில் அமைச்சர் சேகர்பாபு பேட்டி ;
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார்.
வரலாற்றில் இல்லாத மழை
50 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவிற்கு வங்கக்கடலில் உருவாகிய ஃபெஞ்சல் புயல் 6 நாட்கள் போக்கு காட்டி கரையை கடந்தது. வானிலை ஆய்வு மையம் தனியார் அமைப்பு கருத்துகளை உள்வாங்கி தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இதுவரை இல்லாத அளவிற்கு போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்கள்.
முதலமைச்சர் நடவடிக்கை தான் காரணம்
சென்னையில் 13 செ.மீ அளவிற்கு மழை பெய்தாலே ஸ்தம்பித்தது. ஆனால் இம்முறை சில மணி நேரங்களில் வடிந்தது என்றால் முதல்வர் நடவடிக்கைகள் தான் காரணமாகும். இப்புயலின் காரணமாக பாதிப்பு ஏற்பட்ட திருவண்ணாமலை எ.வ.வேலு, செந்தில் பாலாஜி விழுப்புரம் சிவசங்கர் பொன்முடி, கடலூர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம், கிருஷ்ணகிரி, தருமபுரிக்கு முத்துச்சாமி, இராஜேந்திரன் பொறுப்பு அமைச்சர்களாக உள்ளனர். முதல்வர் ஆய்வு செல்லும் போது பொதுமக்களின் பாராட்டு மழையில் நனைந்தார். துணை முதல்வர் அவர்களும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு களத்தில் நின்று போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்தார்.
தமிழகத்தை காக்கும் கடவுள்
2000 கோடி நிவாரணம் ஒன்றிய அரசு வழங்க வேண்டுமென்றார். தமிழகத்தை காக்கும் கடவுளாக இருக்கிறார் முதல்வர். சேலத்திற்கும் சென்னைக்கும் மட்டும் அரசியல் செய்யும் எதிர்க்கட்சி தலைவர் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பேசுகிறார். அவர் கொஞ்சம் திரும்பி பார்க்க வேண்டும். சென்னையில் பல உயிர்கள் பலியானது பல வீடுகள் சேமடைந்ததை அவர் நினைவு கூறவேண்டும். முன் அறிவிப்போடு தான் சாத்தனூர் அணை திறக்கப்பட்டது. பல உயிர்களை காப்பாற்றிய திராவிட மாடல் அரசிற்கு நன்றி தான் அவர் கூறியிருக்க வேண்டும் ஆனால் குறை சொல்கிறார்.
அக்கறை இருந்தால் நிவாரண நிதி கோரிக்கை வைக்க வேண்டும்
அண்டை மாநிலங்களும் பாராட்டும் அளவிற்கு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருந்தால் அவர் ஒன்றிய அரசிடம் நிவாரண நிதி வழங்க கோரிக்கை வைக்க வேண்டும்.
அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அடித்த விவகாரம்
விழுப்புரத்தில் குறிப்பிட்ட கட்சியினை சார்ந்த மகளிர் அணியை சார்ந்தவர்கள் வேண்டுமென்றே சேற்றை வீசியுள்ளார்கள். இந்நிகழ்ச்சிக்கு பிறகும் அமைச்சர் பொன்முடி தொடர்ந்து பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பணிகளை மேற்க்கொண்டு வருகிறார். தமிழ்நாடு முதல்வர் அவர்கள் 50 ஆண்டுகள் பொதுவாழ்வில் இருப்பவர் இது போன்ற இயற்கை பேரிடரை பார்த்தவர். முறையாக இழப்பீடுகளை கணக்கிடக் கூடியவர் உரிய முறையில் வழங்குவார். சாத்தணூர் அணையை பொறுத்தவரை 5 முறை நீர் திறக்கும் போதும் தண்டோரா மூலமாகவும் ஆட்சியர் மூலமாகவும் நோட்டீஸ் வழங்கியுள்ளோம். இதற்கான குறிப்புகளை கையில் வைத்துள்ளோம்.
சென்னையில் மழைக்கு ஒருமாதத்திற்கு முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்தோம். தன்னார்வலர்கள் ஆயிரக்கணாக்கானோர், மரஅறுவை இயந்திரம், நீர் உறிஞ்சும் இயந்திரம், படகுகளை நிறுத்தி வைத்திருந்தோம். இது தான் அரசின் நடவடிக்கைகள் உதாரணமாகும்.
பெரிய அளவில் உயிரிழப்புகள் இல்லை
அனைத்து மாவட்ட ஆட்சியர் இடத்திலும் காணொலி காட்சி வாயிலாக கூட்டங்களை நடத்தினார் முதல்வர். அதே போல் வானிலை ஆய்வு மையத்திலும் முறையாக தகவல் பெறப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இதன் காரணமாக தான் நிலச்சரிவை தவிர்த்து பெரியளவில் உயிரிழப்புகள் இல்லை.
கிரிவல பாதைகள் சரி செய்யப்படும்
திருவண்ணாமலையில் அம்மன் ஊர்வலங்கள் நேற்று துவங்கியது. கடந்த முறையை விட 10%-20% கூட்டம் அதிகரிக்கும். அதற்கு ஏற்றார் போல் கிரிவலப்பாதையில் உள்ள பாதிப்புகள் சரிச்செய்யப்படும். ஏற்கனவே தமிழ்நாடு துணை முதல்வர் அவர்கள் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. 6-7 தேதிகளில் மீண்டும் ஒரு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு பேருந்து, இரயில், அடிப்படை வசதி என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 40 லட்சத்திற்கு அதிகமான மக்கள் கூடினாலும் வெற்றிக்கரமாக கார்த்திகை தீப விழா நடத்தப்படும்.
வருங்காலங்களில் துல்லியமான நடவடிக்கை
பெருமழை காலங்களில் நிலச்சரிவு ஏற்பட வாய்புள்ள இடங்களில் உள்ளவர்களை வேறு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என முதல்வர் அவர்கள் கூறியுள்ளார்கள். வருங்காலங்களில் அது நடைமுறைப்படுத்தப்படும். வருங்காலங்களில் வானிலை ஆய்வுகளை மேலும் துள்ளியமாக கண்டறியும் வகையில் நடவடிக்கைகள் எடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் எடுக்கும். பேரிடர் காலங்களில் சமூக வலைதளங்களில் தேவையற்ற கருத்துகளை பதிவிடுவதை விடுத்து மக்களின் துயரில் பங்கு கொள்ள வேண்டும்.