மேலும் அறிய
Advertisement
ABP NADU IMPACT:செங்கல்பட்டு கொரோனா கருவிகள் வீணடிப்பு..! மருத்துவ கல்வி இயக்குனர் ஆய்வு..!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பரிசோதனை கருவிகள் வீணடிப்பு தொடர்பாக மருத்துவ கல்வி இயக்குனர் ஆய்வு மேற்கொண்டார்
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் காரணமாக, தமிழகம் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் கடந்த ஏப்ரல் மாதம் 2020 முதல் ஆர்.டி.பி.சி.ஆர் கொரோனா பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலகட்டத்தில் நாளொன்றுக்கு குறைந்த அளவு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்தபோது பரிசோதனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டன.
பொதுவாக தற்பொழுது TAQPATH மற்றும் LAB GUN எனப்படும் கருவிகளை வைத்து கொரோனா வைரஸ் பரிசோதனையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவற்றின் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய். பொதுவாக ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்யும் கருவியானது, ஒரே நேரத்தில் ஆயிரம் மாதிரிகளை வைத்து பரிசோதனை மேற்கொள்வார்கள், அவ்வாறு ஒரே நேரத்தில் 1000 மாதிரிகள் வைத்து பரிசோதனை மேற்கொண்டால் மட்டுமே அந்த கருவி வீணாகாமல் முறையாக பயன்படுத்த முடியும்.
செங்கல்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வு மையத்தில் அலட்சியத்தின் காரணமாக கொரோனா பரிசோதனை கருவிகள் வீணாகி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதாவது தற்பொழுது வெளியாகியுள்ள புகைப்படத்தில் lab gun என்ற கருவியின் காலாவதி தேதி எனது கடந்த ஏப்ரல் மாதமே முடிவடைந்துள்ளது. அதேபோல் ஆய்வகத்தில் உள்ள சேமிப்பு பெட்டகத்தில் காலாவதியான நூற்றுக்கணக்கான கொரோனா பரிசோதனை கருவிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை கருவிகள் பயன்படுத்தப்படாமல் வீணாகி உள்ளன. பொதுவாக இவ்வாறு அதிக அளவு மருத்துவப் பொருட்கள் கையிருப்பு இருந்தால், இதுகுறித்து உடனடியாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு அந்தத் துறை தலைவர் தெரிவிக்க வேண்டும். இதனைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில், தேவைப்படுபவர்கள் அந்த மருத்துவ பொருட்களை அனுப்பி வைத்து வீணாகாமல் தடுப்பார்கள்.
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் வீணாகி உள்ள மருத்துவக் கருவிகள் குறித்து முறையாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு தெரிவிக்காத காரணத்தால்தான், கொரோனா பரிசோதனைக்கு கருவிகள் கோடிக்கணக்கில் வீணாகி உள்ளது. இதுகுறித்து கோவையை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு எழுதியுள்ள கடிதத்தில், முறையாக திட்டமிட்டு செயல்படாத காரணத்தினால் பல கோடி மதிப்புள்ள கொரோனா கருவிகள் வீணாகி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், காலாவதியான மருத்துவ உபகரணங்கள் குறித்து உண்மை வெளிவர உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தார். இதுகுறித்த செய்தி நமது ஏபிபி நாடு இணையதளத்தில் வெளியாகியிருந்தது.
இதனைதொடர்ந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவமனையில், இது தொடர்பாக துறைத் தலைவரிடம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்காக 64 கோடி ரூபாய்க்கு அனுப்பப்பட்ட RTPCR கருவிகளில் 5 கோடி ரூபாய் அளவிற்கு காலாவதியாகிவிட்டதாக கோவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி சி.முத்துக்குமார் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஆர்.டி.பி.சி.ஆர். கருவிகளை கையாண்டதில் முறைகேடுகள் நடந்துள்ளதா என ஆய்வு செய்ய தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது .மேலும் பரிசோதனை கருவிகள் கையண்டதில் முறைகேடுகள் இருப்பது பேராபத்து என தெரிவித்த நீதிபதிகள், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு அரசிற்கு உத்தரவு பிறப்பித்தனர்.
நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி, நுண்ணுயிர் பிரிவினல் ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகள் வைக்கப்பட்டுள்ள அறையை வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் இணைந்து சீல் வைத்தனர். மேலும் துறை நிர்வாகிகளிடம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டார். அதனடிப்படையில் மருத்துவமனை முதல்வர் முத்துக்குமார் விசாரணையின் அறிக்கையை, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சில் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்துள்ளார்.
இந்நிலையில், மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு தலைமையில், ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் நுண்ணுயிரியல் பிரிவில் வைக்கப்பட்டுள்ள, காலாவதியாகத ஆர்.டி.பி.சி.ஆர் கருவிகளை பயன்பாட்டுக்காக எடுத்துச் சென்றார். மேலும் காலாவதியான கருவிகளை ஆய்வகத்தில் வைத்து சீல் வைத்தனர். எடுத்துச் செல்லப்பட்ட கருவிகள் ஆய்வுக்கு உட்படுத்தி பிறகு, தமிழ்நாடு மெடிக்கல் கவுன்சிலில் ஒப்படைக்கப்பட உள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
உலகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion