Rain News LIVE: 26 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
Chennai Rain News LIVE Updates in Tamil: சென்னையில் நேற்று கொட்டித்தீர்த்த கனமழையின் தொடர்ச்சியாக இன்றைய சூழல் குறித்த லைவ் அப்டேட்.
LIVE
Background
Chennai Rain Today LIVE Tamil News
சென்னையில் நேற்று மதியம் முதல் பெய்த கனமழையால் பல பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது. இன்றும் மழை தொடரும் என எதிர்பார்க்கப்படும் சூழலில் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அப்டேட் விபரங்களை இந்த லைவ் பிளாக் பகுதியில் அடுத்தடுத்து அறியலாம்.
26 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் - வானிலை மையம்
தமிழ்நாட்டின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று வானிமை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கடலோர மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
அடுத்த 48 மணி நேரத்தில் தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை மையம் தகவல் கூறியுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும், 48 மணிநேரத்திற்கு பின் படிப்படியாக மழை குறையும் என்றும் கூறியுள்ளது.
Tamil Nadu Rain News: தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்..
தமிழகத்தில் இன்றும், நாளையும் அதிகனமழை தொடரும்.. வானிலை ஆய்வு மையம்..
Rain News LIVE: வழக்கத்தை விட அதிக மழை
வடகிழக்கு பருவமழை காலத்தில் வழக்கமான அளவை விட தமிழ்நாட்டில் கூடுதல் மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்