மேலும் அறிய

‘ஒருசிலவற்றை உளமாற வரவேற்கிறேன்! ஆனால்…’ – மத்திய பட்ஜெட் குறித்து விஜய் என்ன சொல்கிறார்?

விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

மீண்டும் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட் குறித்து தவெக தலைவர் விஜய் விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “2025-26ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள், இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிதிநிலை அறிக்கையில் வரவேற்கத்தக்க அம்சங்கள் ஒரு சில மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஆண்டிற்கு 12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரி விலக்கு அளித்திருப்பதை நான் உளமார வரவேற்கிறேன். இதன் மூலம் நடுத்தர மக்களுக்குக் குறிப்பிடும்படியான நிவாரணம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய பெட்ரோல் / டீசல் வரிக் குறைப்பு மற்றும் GST வரிக் குறைப்பு / எளிமைப்படுத்துதல் பற்றி எந்த ஓர் அறிவிப்பும் இல்லாதது மிகப் பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

முதல்முறையாகத் தொழில்முனைவோராக உருவாகும் பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் உள்ளடங்கிய முதல் 5 லட்சம் பேர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப் புதிய திட்டம் தொடங்கப்படும் என்று அறிவித்திருப்பதைத் தமிழக வெற்றிக் கழகம் உளமார வரவேற்கிறது.

அதே சமயம் விலைவாசியைக் கட்டுப்படுத்தவும், வேலை வாய்ப்பை அதிகரிக்கவும் போதிய அறிவிப்புகள் இந்த நிதிநிலை அறிக்கையில் இல்லாதது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

குறிப்பாக, சிறு குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வாயிலாக இளைஞர்களுக்குப் புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையிலான திட்டங்கள் ஏதும் இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை.

புதிய ரயில் தடங்கள், சாலைகள், கோயம்புத்தூர், மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் போன்ற தமிழ்நாட்டுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்கு எந்த ஓர் அறிவிப்பும் இடம்பெறவில்லை.

தமிழகத்தில் மிகத் தொன்மையான இரும்பு நாகரிகம் இருந்தது அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இது தமிழகத்திற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கின்ற கண்டுபிடிப்பாகும். இதற்கு உரிய அங்கீகாரமும் சுற்றியுள்ள பகுதிகளில் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நிதியும் வழங்காதது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது.

அணுஉலை மின் உற்பத்தி PPP (Public Private Partnership) மூலம் தனியார் மயமாக்கப்படுதலுக்கு இந்த நிதிநிலை அறிக்கை முக்கியத்துவம் வழங்கி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. காற்றாலை மற்றும் சூரிய ஒளி மூலம் மின் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வளர்ந்து வரும் இந்தக் காலக்கட்டத்தில் மீண்டும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் அணுமின் உற்பத்தி தொடர்பான அறிவிப்பை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.

Asset Monetization வாயிலாகப் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகள், ஒரு சில பெரும் தனியார் நிறுவனங்களின் கைகளுக்குச் சென்று விடுமோ என்ற ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒவ்வோர் ஆண்டு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும்போதும், சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ள மாநிலங்களைக் கருத்தில் கொண்டு, அந்த மாநிலத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அதிக நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவது மற்ற மாநிலங்களையும் அந்த மாநில மக்களையும் அவமதிப்பதாக உள்ளது. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானதாகும்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் ஒன்றிய அரசானது தமிழகத்திற்குப் புதிய திட்டங்களை அறிவிக்காமலும் போதிய அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலும் புறக்கணித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே ஒன்றிய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும். மாறாக, பாரபட்சத்தோடு நடந்துகொள்வது சரியான அணுகுமுறை இல்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
ABP Premium

வீடியோ

MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு
Kachabeswarar Temple | கச்சபேஸ்வரர் கோயிலில் சிறப்பு ஆருத்ரா தரிசனம்பக்தர்கள் மனமுருகி வழிபாடு
Viluppuram News | தலைக்கேறிய கஞ்சா போதைநடுரோட்டில் இளைஞர் அலப்பறைகை,காலை கட்டிப்போட்ட மக்கள்
OPS joins TVK |தவெகவில் இணையும் OPS?DEAL-ஐ முடித்த செங்கோட்டையன் காலரைத் தூக்கும் விஜய்
Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
US Attacked Venezuela: வெனிசுலாவை தாக்கியது ஏன்? சீனாவிற்கு பாடம், குட்டி நாடுகளுக்கு வார்னிங் - ட்ரம்ப் அதிரடி
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Pongal Parisu 2026: ரூ.3000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு - இன்று அறிவிப்பை வெளியிடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்?
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Sivakarthikeyan: ”ஜனநாயகனை கொண்டாடுங்க, அண்ணன் -தம்பி பொங்கல்” பராசக்தி ஆடியோ லாஞ்ச் - சிவகார்த்திகேயன் பேச்சு
Free Laptop: இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
இவ்வளவு புதிய வசதியோடு இலவச லேப்டாப்பா.!! எந்தெந்த மாணவர்களுக்கு கிடைக்கும்.? தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Tata Punch: விட்டதை பிடிக்கணும்.. அப்க்ரேடாகி வரும் டாடா பஞ்ச் - டிசைன் டூ அம்சங்கள், புதுசா என்னெல்லாம் இருக்கு?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
Jana Nayagan: ஜனநாயகன் பார்க்கும் முன்.. பகவந்த் கேசரி படத்தை மிஸ் பண்ணாம பாருங்க.. எந்த ஓடிடி தெரியுமா?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
TVK AMMK Alliance: தவெக கூட்டணியில் அமமுக-விற்கு எத்தனை சீட் தெரியுமா? விஜய்க்கு தளபதி ஆவாரா தினகரன்?
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
பிராட்வே பேருந்து நிலையம் மாற்றம்! எந்த பேருந்துகள் எங்கிருந்து இயங்கும்! முழு விவரம்
Embed widget