Vidamuyarchi Pre Booking : பண்டிகையை கொண்டாடுங்கலே... தொடங்கியது விடாமுயற்சி டிக்கெட் முன்பதிவு
Vidamuyarchi : விடாமுயற்சி படத்திற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முதல் நாளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி உள்ளது.

அஜித் ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து காத்திருந்த விடாமுயற்சி திரைப்படம் வரும் பிப்ரவரி ஆறாம் தேதி அன்று ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
விடாமுயற்சி:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான நடிகர் அஜித் தற்போது கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் விடமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இந்த படங்கள் ரிலீஸ்சுக்கு தயாராகி வருகிறது. இதில் விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகவுள்ளது. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் மகிழ் திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார்.
துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் குமார் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. அதன் பின் அந்த படம் கைவிடப்பட்டதைத் தொடர்ந்து மகிழ் திருமேணி அஜித்தை இயக்கவிருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க அஜர்பைஜானில் நடந்து முடிந்தது.
இதையும் படிங்க: எனக்கு கர்வம் வராமல் வேற எவனுக்குடா வரும்...ஆவேசமாக பேசிய இளையராஜா
படத்தை தொடர்ந்த சர்ச்சைகள்:
ஆனால் படப்பிடிப்பின் போது ஏகப்பட்ட வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் வெளிவந்தன, அதாவது அஜித் சரியாக படப்பிடிப்புக்கு வரவில்லை எனவும், இதனால் தான் படப்பிடிப்பு முடிய தாமதமானதாகவும் கூறப்பட்டது. மேலும் மகிழ் திருமேனி சில காட்சிகளை மீண்டும் ரீ-ஷுட் செய்ததாக கூறப்பட்டது. ஆனால் இது எதுவும் உண்மையில்லை என இயக்குனர் மகிழ் திருமேனி தெரிவித்திருந்தார்.
அஜித் கார் ரேசிங்:
அஜித் கார் ரேசிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். துபாயில் நடந்த 24h கார் ரேஸ் தொடரில் அஜித்தின் அணி மூன்றாம் இடம் பிடித்து அசத்தி இருந்தது. மேலும் கார் ரேஸ் சீசன் முடியும் வரை படங்களில் நடிக்க போவதில்லை என்றும் அதற்கு இடைப்பட்ட காலங்களில் தான் நடிப்பேன் என்று அஜித் தெரிவித்திருந்தார். மேலும் சில நாட்களுக்கு முன்பு தான் அஜித்துக்கு மத்திய அரசு பத்ம பூஷன் விருது வழங்கி சிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சட்டையை கழற்றி சேட்டையாக போஸ் கொடுத்த கருப்பன் பட நடிகை..வைரல் க்ளிக்ஸ்
டிக்கெட் முன்பதிவு:
இந்த படத்திற்கான முன்பதிவு எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர், இந்நிலையில் நேற்று நள்ளிரவு விடமுயற்சி திரைப்படத்திற்கான முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்திலேயே முதல் நாளில் பெரும்பாலான காட்சிகள் ஹவுஸ்ஃபுல்லாகி உள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் அஜித்தின் திரைப்படம் தியேட்டரில் வெளியாக உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த படத்திற்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

