5வது பட்டியலை வெளியிட்ட விஜய்.! புதிய 19 தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம்...
TVK District Secretaries 5th List: தமிழக வெற்றிக் கழகத்தின், மேலும் 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளை நியமித்து, 5ம் கட்ட பட்டியலை வெளியிட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே 4 கட்டங்களாக 66 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், தமிழக வெற்றிக கழகத்தின் துவக்க நாளான இன்று ( பிப்.3 ), மேலும் 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இந்நிலையில், புதிதாக நியமிக்கப்பட்ட 19 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் உட்பட மொத்த 95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகளின் பெயர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
தவெக துவக்க நாள்
தமிழ்நாட்டில் , தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடையும் நிலையில், கட்சி துவக்க நாளான இன்று , பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி, கொள்கைத் தலைவர்களின் உருவச்சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.
நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டுத் தொடக்க விழாவையொட்டி, சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலகத்தில் இன்று கழகக் கொடியை ஏற்றி வைத்தேன்.
— TVK Vijay (@tvkvijayhq) February 2, 2025
மேலும், கழகத்தின் கொள்கை முழக்கங்கள் மற்றும் வாகை மலர் ஆகியவற்றுடன் நம் தலைமை நிலையச் செயலகத்தில் நிறுவப்பட்டுள்ள ஐம்பெரும்… pic.twitter.com/HkZTT5n2DU
இந்நிலையில், கட்சியை வலுப்படுத்தும் வகையில், கட்சியில் நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய் இறங்கியுள்ள நிலையில், அதன் முதல் பணியாக தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், அதை 120 மாவட்டங்களாக பிரித்து, தவெக நிர்வாகிகளை நியமனம் செய்யும் முடிவை விஜய் எடுத்துள்ளார். ஒரு மாவட்டத்திற்கு ஒரு மாவட்ட செயலாளர், ஒரு மாவட்ட பொருளாளர், ஒரு இணை செயலாளர், 2 துணை செயலாளர் மற்றும் 10 நியமன உறுப்பினர்களும் நியமிக்கப்படும் வகையிலான முடிவை எடுத்திருக்கிறார்.
புதிய 19 மாவட்ட நிர்வாகிகள்:
இதுவரை, 76 மாவட்டங்களுக்கான மாவட்ட பொருளாளர், இணை செயலாளர், துணை செயலாளர் மற்றும் நியமன உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். இன்று, மேலும் 19 புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கு , விஜய் உருவம் கொண்ட, வெள்ளி நாணயம் பரிசாக வழங்கியதாக கூறப்படுகிறது
தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
— TVK Vijay (@tvkvijayhq) February 2, 2025
மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... Click Here https://t.co/XToemp0M2g
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும்…
இதையடுத்து, புதிதாக 19 மாவட்ட நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது, அவர்களை நேர்காணல் செய்து, கட்சி திட்டங்கள் குறித்து ஆலோசனை செய்து, நிர்வாகிகளை நியமனம் செய்தார். இக்கூட்டத்தில், மாவட்ட நிர்வாகிகளுடன், தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, 19 மாவட்டங்களுக்கான புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, விஜய் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
95 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் பட்டியல்”
புதிதாக 19 மாவட்டத்திற்கான நிர்வாகிகள் உட்பட 19 மாவட்டங்களுக்கான, அனைத்து நிர்வாகிகளின் பெயர் விவரங்களை தெரிந்து கொள்ள, இந்த லிங்க்கை கிளிக் செய்யவும். பின்னர், எந்த மாவட்டத்திற்கான நிர்வாகிகள் விவரங்களை, தெரிந்து கொள்ள வேண்டுமோ, அந்த மாவட்டத்தின் மீது கிளிக் செய்யவும்.
95 மாவட்ட தவெக நிர்வாகிகள் பெயர் பட்டியல்
வாழ்த்து தெரிவித்த விஜய்:
இதுகுறித்து விஜய் தெரிவித்ததாவது, “தமிழக வெற்றிக் கழகத்தில் ஐந்தாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்” என்று கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

