Union Budget 2025: ஆஹா..! மத்திய அரசின் வருங்காலத்திற்கான முதலீடுகள்..! மாணவர்களுக்கு பட்ஜெட்டில் இருந்தது என்ன?
Union Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு பலன் அளிக்கும் விதமாக இருந்த அறிவிப்புகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Union Budget 2025: மத்திய அரசின் பட்ஜெட்டில் அடுத்த ஆண்டில், மருத்துவ படிப்புக்கான இடங்கள் 10,ஆயிரம் எண்ணிக்கையில் உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு வ்ரவேற்பை பெற்றுள்ளது.
ஐஐடிக்கள் விரிவாக்கம்:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது எட்டாவது பட்ஜெட் உரையில் ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களில் (ஐஐடி) கூடுதலாக 6,500 இடங்களை உருவாக்குவதாகவும், ஐஐடி பாட்னாவை விரிவுபடுத்துவதாகவும் அறிவித்தார். அதன்படி, “கடந்த 10 ஆண்டுகளில் 23 ஐஐடிகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 65,000 லிருந்து 1.35 லட்சமாக 100 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் 6,500 மாணவர்களுக்கு கல்வி கற்பதற்கு வசதியாக 2014க்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 ஐஐடிகளில் கூடுதல் உள்கட்டமைப்பு உருவாக்கப்படும்" என்று சீதாராமன் கூறினார். ஐஐடி, பாட்னாவில் தங்கும் விடுதி மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகளும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்தார். இதன் மூலம் நாட்டின் முதன்மையான கல்வி நிறுவனங்களான ஐஐடிக்களில் பயில கூடுதல் மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பள்ளிகளில் பிராட்பேண்ட் இணைப்பு:
கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் உயர்கல்விக்கு இந்திய மொழி புத்தகங்களின் டிஜிட்டல் வடிவத்தை வழங்குவதற்காக 'பாரதிய பாஷா புஷ்தக்' திட்டத்தை அரசாங்கம் தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்விக்கான AI இன் சிறந்த மையம்
500 கோடி செலவில் கல்விக்காக செயற்கை நுண்ணறிவுக்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் என்று சீதாராமன் அறிவித்தார். 2023 இல் விவசாயம், சுகாதாரம் மற்றும் நிலையான நகரங்களுக்கான செயற்கை நுண்ணறிவுக்கான மூன்று சிறப்பு மையங்களை அவர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவக் கல்வியின் விரிவாக்கம்
மாண்வர்களுக்கு பயனளிக்கும் விதமாக மருத்துவ கல்லூர்களில் அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்கள் உருவாக்கப்படும் , அடுத்த ஆண்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கூடுதலாக 10,000 இடங்கள் ஏற்படுத்தப்படும் என நிதியமைச்சர் அறிவித்தார். இதனால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், போதிய மருத்துவ இடஙக்ள் இல்லாததால் மருத்துவ படிப்பை மேற்கொள்ள முடியாத மோசமான சூழல் தவிர்க்கப்படும் என நம்பப்படுகிறது. இதுதொடர்பாக பேசுகையில் "எங்கள் அரசு பத்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட 1.1 லட்சம் UG மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி இடங்களைச் சேர்த்துள்ளது, இது 130 சதவீதம் அதிகரித்துள்ளது" என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கான இந்த முதலீடு, நாட்டின் எதிர்காலத்திற்கானதாக கருதப்படுகிறது. இதன் மூலம், திறன் மிகுந்த சமூகம் உருவாகி, நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் என நம்பப்படுகிறது.
பம்பர் ஆஃபர்:
இதற்கிடையில், புதிய வரி விதிப்பு முறையின் கீழ் 12 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு வரி இல்லை என்று சீதாராமன் அறிவித்தார். "அனைத்து வரி செலுத்துவோருக்கும் பயனளிக்கும் வகையில் பலகைகள் மற்றும் விகிதங்கள் மாற்றப்படுகின்றன" என்று நிதி அமைச்சர் கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

