IND Vs ENG: அடியா அது.!! பொளந்து கட்டிய அபிஷேக் ஷர்மா... கதறிய இங்கிலாந்து பவுலர்கள்...
இங்கிலாந்து அணியுடனான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியில், இங்கிலாந்து பவுலர்களை பிரித்தெடுத்த இந்திய அணியின் இளம் வீரர்கள், 20 ஓவர்களில் 247 ரன்களை குவித்தனர்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில், அதிரடியாக ஆடிய இந்திய அணி, 20 ஓவர்களில், 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது.
இங்கிலாந்து பவுலர்களை பிரித்தெடுத்த அபிஷேக் ஷர்மா
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையே 5-வது மற்றும் இறுதி டி20 போட்டி, மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான சஞ்சு சாம்ஸன் மற்றும் அபிஷேக் ஷர்மா பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டனர். 7 பந்துகளில் 16 ரன்கள் அடித்த நிலையில் சஞ்சு சாம்ஸன் அவுட்டாக, அடுத்த திலக் வர்மா களமிறங்கினார்.
மறுபுறம், இங்கிலாந்து பவுலர்களை பிரித்தெடுத்த அபிஷேக் ஷர்மா, 17 பந்துகளில் அரை சதத்தை பூர்த்தி செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்த திலக் வர்மாவும் கொஞ்சம் அதிரடி காட்டிய நிலையில், 15 பந்துகளில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, அணித்தலைவர் சூர்யகுமார் களமிறங்கினார். இதனிடையே, பந்துகளை பறக்கவிட்டுக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா 37 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார்.
இந்நிலையில், அணித் தலைவர் சூர்யகுமார் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களத்தில் இறங்கிய ஷிவம் தூபே அவரது பங்கிற்கு இங்கிலாந்து பவுலர்களை பின்னி எடுத்தார். அவர் பங்கிற்கு 13 பந்துகளில் 30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 9 ரன்களில் ஆட்டமிழக்க, அதற்கு அடுத்ததாக வந்த ரிங்கு சிங்கும் 9 ரன்களில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து அக்ஸர் படேல் களமிறங்கினார்.
மறுபுறம், தொடர்ந்து அதிரடி காட்டிக்கொண்டிருந்த அபிஷேக் ஷர்மா, 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ஷமி களமிறங்கினார். இதனிடையே, 11 பந்துகளில் 15 ரன்கள் எடுத்திருந்த அக்ஸர் படேல் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரவி பிஷ்னாயும் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 20 ஓவர்களில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 247 ரன்களை குவித்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

