மேலும் அறிய

Free Coaching Class: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு இலவசப் பயிற்சி; கலந்துகொள்வது எப்படி? விவரம்

TNPSC- GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ வண்ணாரப்பேட்டையில்‌ அமைந்துள்ள அரசு வடசென்னை ஐ.டி.ஐ வளாகத்தில்‌ துவங்கப்பட உள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை வண்ணாரப்பேட்டை, அரசு வடசென்னை ஐ.டி.ஐ. வளாகத்தில்‌ தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதுகுறித்துச் சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ தெரிவித்துள்ளதாவது:

சென்னை, கிண்டி தொழில்சார்‌ வேலைவவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ இயங்கும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தில்‌ தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தால்‌ நடத்தப்படவுள்ள கிராம நிர்வாக அலுவலர்‌, இளநிலை உதவியாளர்‌, தட்டச்சர்‌ பதவிகளுக்கான ஒருங்கிணைந்த TNPSC- GROUP IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள்‌ வண்ணாரப்பேட்டையில்‌ அமைந்துள்ள அரசு வடசென்னை ஐ.டி.ஐ வளாகத்தில்‌ துவங்கப்பட உள்ளது.

வார நாட்களில் பயிற்சி வகுப்புகள்

இப்பயிற்சி வகுப்பானது வார நாட்களில்‌ (திங்கள்‌ மற்றும்‌ வெள்ளி வரை ) நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான குறைந்தபட்ச கல்வித்‌ தகுதி பத்தாம்‌ வகுப்பு ஆகும்‌.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்தப் பயிற்சி வகுப்பில்‌ சேர விருப்பமுள்ளவர்கள்‌ விண்ணப்பப் படிவ நகலுடன்‌ தங்களது ஆதார்‌ அட்டை நகல்‌ மற்றும்‌ பாஸ்போர்ட்‌ அளவுள்ள புகைப்படத்துடன்‌ 10/02/2025-ற்குள்‌ சென்னை- 32, கிண்டி, தொழில்சார்‌ வேலைவாய்ப்பு மற்றும்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தை நேரடியாக ஏதாவது ஒரு வேலை நாட்களில்‌ அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்‌.

மேலும்‌, பயிற்சி வகுப்பில்‌ கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள்‌ கீழ்கண்ட க்யூஆர் கோடு ஸ்கேன் செய்து பதிவு செய்து கொள்ளலாம்‌. மேலும்‌ விவரங்களுக்கு cgpecgc@gmail.com என்ற மின்னஞ்சலில்‌ தொடர்பு கொள்ளலாம்‌.

வட சென்னையை சேர்ந்த தகுதி வாய்ந்த தேர்வர்கள்‌ இப்பயிற்சி வகுப்பில்‌ சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ ரஷ்மி சித்தார்த்‌ ஜகடே கேட்‌டுக் கொண்டுள்ளார்‌.

2025ஆம் ஆண்டுக்கான குரூப் 4 தேர்வு எப்போது?

2025ஆம் ஆண்டுக்கான தேர்வு  எப்போது நடைபெறும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. விண்ணப்பப் பதிவு, காலி இடங்கள் உள்ளிட்ட விவரங்கள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் தேர்வர்கள் முன்கூட்டியே குரூப் 4 தேர்வுக்குத் தயார் ஆக வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Exam 2025: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rajinikanth | ”தலைவர் அரசியலுக்கு வருவார்? 2026ல்  நிச்சயம் நடக்கும்” ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்NEET Suicide | NEET தேர்வு பயம் மாணவி தூக்கிட்டு தற்கொலை விழுப்புரத்தில் பரபரப்பு..! | Villupuramதேசிய அரசியலில் விஜய்! மோடி, நிதிஷ்-க்கு ஸ்கெட்ச்! பிரசாந்த் கிஷோரின் மூவ்Kaliyammal DMK | எகிறிய டிமாண்ட்!குழப்பத்தில் காளியம்மாள்!தவெகவா? திமுகவா? அதிமுகவா? | MK Stalin | TVK | ADMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Exam 2025: +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
+2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து...
Oscars 2025: 22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
22 வருடங்களுக்குப்பின் நடிகரை பழிவாங்கிய நடிகை.. ஆஸ்கர் ரெட் கார்பெட்டில் சுவாரஸ்யம்
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 Winners: ஆஸ்கர் விருது வென்றவர்களின் முழு பட்டியல் இதோ
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
Oscars 2025 LIVE: அடுத்தடுத்து விருதுகளை அள்ளிய டூன் 2.. ஆஸ்கர் விருதுகள் நேரலை
"ஸ்டாலின் பற்ற வைத்த தீ.. இந்தியா முழுவதும் காட்டுத்தீயா பரவி இருக்கு" கொதிக்கும் உதயநிதி!
"எம்பி பதவியும் இல்ல.. அமைச்சர் பதவியும் இல்ல" நாம் தமிழரில் இருந்து விலகிய காளியம்மாளின் முதல் பேட்டி!
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து..  இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
IND vs NZ: தமிழனின் சுழலில் சிக்கிய நியூசிலாந்து.. இந்தியா சூப்பர் வெற்றி! அரையிறுதியில் யாருடன் மோதல்?
CUET Exam 2025: கியூட் தேர்வுத் தேதி அட்டவணை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
கியூட் தேர்வுத் தேதி அட்டவணையை வெளியீடு.! கடைசி தேதி எப்போது? தேர்வு எப்போது?
Embed widget