Budget Memes: வைரலாகும் பட்ஜெட் மீம்ஸ்கள்: இது மத்திய பட்ஜெட் இல்லை, பீகார் பட்ஜெட்
Union Budget 2025 Memes: பீகார் சட்டபேரவைத் தேர்தல், இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், நிதிஷ்குமாருக்கு பயந்து மத்திய அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளதாக, மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மக்களவையில் 2025-2026 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஆனால், இது மத்திய பட்ஜெட் இல்லை; பீகார் பட்ஜெட் என்று சமூக வலைதளங்களில் சிலர் மீம்ஸ்களை வெளியிட்டு நகைச்சுவை செய்து வருகின்றனர்.
பாஜக-நிதிஷ்குமார்:
கடந்த வருடம், மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத காரணத்தால், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடனும், நிதிஷ் குமாரின் ஜேடியு- உடனும் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது, பாஜக.
இந்நிலையில், இந்த வருடம் கடைசியில் பீகார் மாநிலத்திற்கான சட்டப்பேரவைக்கான தேர்தலும் நடைபெற உள்ளது. இதனால், பீகார் மாநிலத்திற்கு , பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்க வேண்டும் எனவும், தனது செல்வாக்கை காட்ட வேண்டும் எனவும் பாஜகவுக்கு, ஜேடியு தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
மேலும், சில நாட்களுக்கு முன்பு கூட, மணிப்பூரில் பாஜக கூட்டணிக்கு ஆதரவை விலக்கி கொள்வதாக நிதிஷ்குமார் கட்சியினர் தெரிவித்தது, நிதிஷ்குமாரின் மறைமுக எச்சரிக்கை என்றும் பார்க்கப்பட்டது.
பட்ஜெட் மீம்ஸ்கள்:
இந்நிலையில் நிதிஷ்குமாரை ஆறுதல் படுத்த , இந்த பட்ஜெட்டில் பீகாருக்கு சாதகாமான பல அறிவிப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக, சமூக வலைதளங்களில் நகைச்சுவை மீம்ஸ்கள் வருவதை பார்க்க முடிகிறது.
Also Read:பட்ஜெட்டில் ரூ.14.8 லட்சம் கோடி கடன் வாங்கி, 12 லட்சம் கோடி வட்டியா.! ஷாக்கான மக்கள்
பட்ஜெட் பிறகு, பீகார் மாநிலம, இப்படி மாறப் போகிறது என நடிகர் ரஜினி நடித்த சிவாஜி படக்காட்சியை வைத்து மீம்ஸ் வெளியிட்டுள்ளார்.
Bihar after this budget : pic.twitter.com/OnIDswxRZS
— Punjab Puls (@moge_oye) February 1, 2025
இது மத்திய பட்ஜெட் இல்லை.. பீகார் பட்ஜெட் என ஒரு பயணர் தெரிவித்திருக்கிறார்.
Feels like the Union Budget got a Bihar special edition!#financeminister #budget2025 #finance #stockmarket pic.twitter.com/5zS6y5nxLB
— StockGro (@stockgro) February 1, 2025
மற்றொரு பயணர் , இந்த பட்ஜெட்டில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஆதிக்கம் , இப்படித்தான் இருக்கிறது என ஒரு மீமை பகிர்ந்துள்ளார்.
Bihar supremacy Budget mein 💪#NirmalaSitharaman#Budget2025 pic.twitter.com/JlC39kuWWS
— Raja Babu (@GaurangBhardwa1) February 1, 2025
இது பீகார் மாநிலத்திற்கான நேரம் என ஒரு மீமை பகிர்ந்துள்ளார்..
It's Bihar's budget this time .#Budget2025 #NirmalaSitharaman pic.twitter.com/793Hf3uolc
— Surbhi (@SurrbhiM) February 1, 2025
Also Read: Income Tax 2024 Vs 2025: கடந்த பட்ஜெட் வரி விகிதம் Vs புதிய பட்ஜெட் வரி விகிதம்: எவ்வளவு இருந்தது ?
இப்படியாக , சமூக வலைதளங்களில் பட்ஜெட் குறித்து, நகைச்சுவையாக் பல மீம்ஸ்கள் வருவதை பார்க்க முடிகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

