Shivam Dube : காயமடைந்த துபே! ஐபிஎல் 2025 விலகல்? CSK-விற்கு வரப்போகும் பெரிய தலைவலி இவை தான்
IPL 2025 : ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் தொடரில் இருந்து விலகினால் சென்னை அணி சந்திக்கபோகும் பிரச்னைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.

சென்னை அணி சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய அங்கமாக இருக்கும் சிவம் துபே இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20யில் காயமடைந்தார். ஐபிஎல் தொடங்க இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அவர் தொடரில் இருந்து விலகினால் சென்னை அணி சந்திக்கபோகும் பிரச்னைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
மிடில் ஒவர் நாயகன்
ஷிவம் துபே சென்னை அணிக்காக நான்காம் வரிசையில் களம் இறங்குவதால் மிடில் ஓவர்களில் அவர் சற்று செட்டிலாகி ஆட வசதியாக உள்ளது. அவர் தனது அதிரடியை தொடங்கிவிட்டால் அதன் பிறகு நிறுத்த வாய்ப்பில்லை. இதனால் துபே சென்னை இவ்விடத்தில் தங்கத்தை போன்றவர்.
ரன் அடிக்கும் விதம்:
ஓவர்கள் 7-11: 35% டாட் பால்களுடன் 119.7 ஸ்ட்ரைக் ரேட்டில் 140 ரன்கள்.
ஓவர்கள் 12-16: 30.5% டாட் பால்களுடன் 166.3 ஸ்ட்ரைக் ரேட்டில் 464 ரன்கள்.
ஓவர்கள் 17-20: 32.1% டாட் பால்களுடன் 187.5 ஸ்ட்ரைக் ரேட்டில் 210 ரன்கள்.
இதையும் படிங்க: சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; அஸ்வினுக்கு சிறப்பு விருது – கவுரவித்த பிசிசிஐ
சுழலுக்கு எதிரான ஃபயர்பவரை இழப்பு
சிஎஸ்கேவின் இன் பேட்டிங் டெம்ப்ளேட் எப்போதுமே மிடில் ஓவர்களில், குறிப்பாக அவர்களின் சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் சுழலைச் சுற்றியே உள்ளது. மேலும் ஸ்பின்னர்களுக்கு எதிராக சிவம் துபேவின் பேட்டிங் மிகப்பெரிய ஆயுதமாக இருந்து வருகிறது. ஸ்பின்னர்களுக்கு எதிரான அவரது அதிரடி பேட்டிங்களால் எதிரணிகள் ஸ்பின்னர்கள் வைத்து பந்து வீச தயக்கம் காட்டின்
ஐபிஎல் 2023 மற்றும் 2024 -ல்
- 12-16 ஓவர்களில் 22 பவுண்டரிகள் மற்றும் 38 சிக்ஸர்கள், அவரை அந்த ஓவர்களில் மிக ஆபத்தான பேட்ஸ்மென் ஆக்கியது
- ஒவ்வொரு 5.6 பந்திலும் ஒரு பவுண்டரி அடித்துள்ளார் துபே
அவர் இல்லாமல், சிஎஸ்கே அணி தரமான சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட தடுமாறலாம், கடந்த சில சீசன்களில் துபே தான் சுழற்பந்து வீச்சாளர்களை சமாளிப்பதில் துறுப்பு சீட்டாக உள்ளார்.
இதையும் படிங்க: IND Vs Eng 5th T20: வான்கடேவில் வாணவேடிக்கையா? இந்தியா Vs இங்கிலாந்து, இன்று 5வது டி20 போட்டி..!
டெத் ஓவர்களில் பெரிய இழப்பு:
துபே சென்னை அணிக்கு முதன்மையான ஃபினிஷராக இல்லாவிட்டாலும், அவர் மிடில் ஓவர்களுக்கும் டெத் ஓவர்களுக்கும் இடையே ஒரு முக்கியமான பங்களிப்பை அளிக்கிறார். கடைசி நான்கு ஓவர்களில் அவரது ஸ்டிரைக் ரேட் 187.5, தேவைப்படும் போது அவரால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக பெரிய சிக்ஸர்களை அடிக்கும் அவரது திறமை CSK க்கு டெத் ஓவர்களில் கூடுதல் பலத்தை அளிக்கிறது.
அவர் இல்லாமல், சிஎஸ்கே இறுதி ஓவர்களில் வேலையைச் செய்ய எம்எஸ் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜாவை பெரிதும் நம்ப வேண்டியிருக்கும் .குறிப்பாக வலுவான டெத் பவுலிங் யூனிட்களைக் கொண்ட அணிகளுக்கு, அது அவர்களை இன்னும் கொஞ்சம் யூகிக்கக்கூடியதாகவும், திட்டமிடுவதற்கு எளிதாகவும் இருக்கும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

