வருமான வரியை குறைத்துவிட்டு மத்திய அரசு செய்யப்போகும் சேட்டை! புட்டு புட்டு வைக்கும் ஆனந்த் சீனிவாசன்
அதேபோல் கிஷான் கிரெடிட் கார்டு, சிறு குறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதெல்லம் வங்கிகள் கொடுக்கின்றன

வருமான வரியை குறைத்துவிட்டு மறைமுக வரியை ஏற்றப்போகிறார்கள் என பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில் “இந்த பட்ஜெட்டை நான் பார்த்தை வரைக்கும் விவசாயிகளுக்கு கடன் நான் அதிகமாக கொடுக்கிறேன். 5 வருஷத்துல மெடிக்கல் சீட் கொடுப்பேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். மெடிக்கல் சீட்டை மாநில அரசு கொடுக்கிறது. இல்லை தனியார் கொடுக்கிறது. மத்திய அரசு கொடுக்கவில்லை.
அதேபோல் கிஷான் கிரெடிட் கார்டு, சிறு குறு தொழில்களுக்கு கடன் கொடுப்பதெல்லம் வங்கிகள் கொடுக்கின்றன. தனியார் வங்கிகள் கொடுக்கும் கடனை நீங்கள் ஏன் பட்ஜெட்டில் பேசியிருக்கிறீர்கள்.
இந்த வருஷத்துக்கான பட்ஜெட்டை பேசாமல் 5 வருஷத்துக்கு என்ன? 7 வருஷத்துக்கு என்ன என்று பேசுகிறீர்கள். இந்த வருஷத்துக்கான வரவு என்ன? செலவு என்ன? என்பதை பேச வேண்டும், பேசவில்லை. இந்த பட்ஜெட்டில் 80 நிமிஷம் பேசினதில் ரயில்வே என்ற வார்த்தையே கேட்கவில்லை. சராசரியாக தினம் 20 கோடி பேர் ரயில்களில் பயணிக்கிறார்கள். அதை பேசவே இல்லை. 2 கோடி பேர் போகும் விமானத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அப்படியென்றால் இந்த அரசு பணக்காரர்களுக்குத்தான் வேலை செய்கிறது.
வந்தே பாரத் 51 ரயில்கள் விட்டுள்ளீர்கள். இதில் முக்காவாசி ரயில்கள் காலியாகத்தான் செல்கிறது. திரும்ப திரும்ப 2 கோடி பேருக்கு மட்டுமே திட்டங்களை சொல்கிறீர்கள். தவிர அனைவருக்குமான ரயில் திட்டங்கள் என்ன இருக்கு? கூடுதலாக எவ்வளவு தண்டவாளங்கள் போடப்போறீங்க என்று சொல்லவே இல்லை.
டெலிகாம்க்கு என்ன பண்ணியிருக்கிறீர்கள். நாங்கள் சொல்வதை கேட்கவில்லை என்றால் அவர்கள் கடன் வாங்க முடியாது என்று மாநில அரசை மிரட்டிதான் வைத்துள்ளீர்கள். பவரை பேசவில்லை. டெலிகாமை பேசவில்லை. ரயில்வே பற்றியும் பேசவில்லை. ஒரே ஒரு யூரியா ப்ளாண்ட் அசாமில் போடப்போவதாக சொன்னீர்கள். பீகாருக்கு சில அறிவிப்புகள். வேறு என்ன இருந்தது பட்ஜெட்டில். ரூ.24 லட்சம் கோடி வரியை ரூ.29 லட்சம் கோடி வரியாக வாங்கப்போவதாக சொல்லிருக்கீங்க. 20 சதவீதம் வரி ஏறும் என்று சொல்லியிருக்கீங்க.
வருமான வரியை குறைத்தீர்கள் என்றால் மறைமுக வரியை ஏற்றப்போகிறீர்கள். மற்றவகையில் எல்லா வரியும் வாங்க போறீங்க. மறைமுக வரியை குறைக்கப்போவதில்லை. பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் வரிகளை குறைக்கப்போவதில்லை. ரூபாயின் அளவில் குறைந்து தங்கத்தின் வாயிலாக ஏறும்” எனத் தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

