Abhishek Sharma: மிரட்டிய அபிஷேக் ஷர்மா; 13 சிக்ஸர் - 37 பந்துகளில் சதம் அடித்து சாதனை!
Abhishek Sharma Century: இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.

IND Vs Eng 5th T20: டி-20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற புதிய சாதனையை அபிஷேக் ஷர்மா படைத்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து டி20 தொடர்:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. இங்கிலாந்து அணி இந்தியாவில் 14 ஆண்டுகளாக டி20 தொடரில் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி, 2ம் தேதி 5-வது மற்றும் இறுதிப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். சஞ்சு சாம்சன் அதிரடியாக தொடங்கினாலும், 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா என இந்திய வீரர்கள் பவர்ப்ளேவில் அதிரடியாக விளையாடினர்.
Even Mukesh Ambani saab is standing and clapping for Abhishek Sharma. Madness at Wankhede. pic.twitter.com/TGrQRGjfAN
— R A T N I S H (@LoyalSachinFan) February 2, 2025
அதிரடியாக விளையாடிய அபிஷேக் ஷர்மா:
இடதுகை பேட்ஸ்மென் அபிஷேக் ஷர்மா இந்தப் போட்டியில் இரண்டு புதிய சாதனை படைத்தார். தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா அடித்த பந்துகள் சிஸ்கர்களாக பறந்தன. அதிரடியாக விளையாடிய அபிஷேக், 17 பந்துகளில் அரைசதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம், இந்திய அணிக்காக டி20 போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார். அதிரடியாக விளையாடிய அபிஷேக், 37 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 5 பவுண்ட்ரிகளுடன் சதம் அடித்து அசத்தினார். இவர் 35 பந்துகளுக்கள் சதம் அடித்திருந்தால் ரோஹித் ஷர்மாவின் சாதனையை முறியடித்து முதலிடம் பிடித்திருப்பார்.
கிரிக்கெட் வீரர் | பந்துகள் / 100 | எதிரணி | மைதானம் - ஆண்டு |
ரோஹித் ஷர்மா | 35 பந்துகள் | இலங்கை | இந்தூர் - 2017 |
அபிஷேக் ஷர்மா | 37 பந்துகள் | இங்கிலாந்து | மும்பை - 2025 |
சஞ்சு சாம்சன் | 40 பந்துகள் | வங்காளதேசம் | ஹைதராபாத் - 2024 |
திலக் வர்மா | 41 பந்துகள் | தென் ஆப்பிரிக்கா | ஜோகன்ஸ்பர்க் - 2024 |
சூர்யகுமார் யாதவ் | 45 பந்துகள் | இலங்கை | ராஜ்கோட் -2023 |
கே.எல். ராகுல் | 40 பந்துகள் | மேற்கு இந்திய தீவுகள் | Lauderhill - 2016 |
அபிஷேக் ஷர்மா | 46 பந்துகள் | ஜிம்பாப்வே | Harare - 2024 |
அபிஷேக் ஷர்மாவின் சாதனைகள்:
- டி-20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக குறைந்த பந்துகளில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். ஆஸ்திரேலிய வீரர் ஆரன் ஃபின்ச், கிறிஸ் கெயில் 47 பந்துகளில் சதம் அடித்த பட்டியலில் அபிஷேக் இடம்பெற்றார்.
- சர்வதேச டி20- ரக கிரிக்கெட்டில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் அபிஷேக் சர்மா இடம்பிடித்துள்ளார். அவர் இன்றைய போட்டியில் 13 சிக்ஸர்கள் எடுத்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித், சஞ்சு சாம்சன், திலக் வர்மா ஆகியோர் தலா 10 சிக்ஸர்களுடன் உள்ளனர்.
- டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரரானார்.
டி20- போட்டிகளில் முதல் பவர் ப்ளேயில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 95 ரன்களை எடுத்து சாதனை படைத்தது.
பவர் ப்ளேயில் இந்திய அணியில் அதிகபட்ச ரன்:
- 95/1 vs இங்கிலாந்து - மும்பை /2025
- 82/2 vs ஸ்காட்லாந்து / துபாய் - 2021
- 82/1 vs வங்காள தேசம் / ஹைதராபாத் - 2024
- 78/2 vs தென் ஆப்பிரிக்கா / ஜோஹன்ஸ்பர்க் - 2018
அதிரடி காட்டிய அபிஷேக் சர்மா, 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து அடில் ரஷீத் பந்தில் ஜோஃப்ரே ஆர்ச்சரிடம் கேட் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

