Liver Health:வெண்ணெய், நெய் சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்குமா?
Liver Health: கல்லீரல் ஆரோக்கியம் குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவிப்பதை காணலாம்.
உணவில் அதிகமாக 'Saturated fats' இருப்பதால கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்பதாக சொல்லப்படுகிறது. வெண்ணெய், நெய், இறைச்சி வகைகள் தினமும் உணவில் இருந்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படுமா என்பது பற்றி நிபுணர்கள் சொல்வதை காணலாம்.
உடல் உறுப்புகளிலேயே கல்லீரலின் பணி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ரரத்தத்தில் இருக்கும் நச்சுக்கள், கழிவுகள் ஆகிவயற்றை நீக்குவது; உணவு செரிமானத்திற்கு பிறகு உறிஞ்சிக் கொண்ட சத்துகளை உடல் முழுவதும் ரத்தத்தில் கலக்கும் பணி உள்ளிட்டவற்றை அயராது செய்து வருவதும் கல்லீரல் தான். உடலின் பிற உறுப்புகளை விட, அதிகளவிலான வேலைகளைச் செய்வதும் கல்லீரல் என்று சொல்லப்படுகிறது.
எனவே நாம் உண்ணும் நச்சுப் பொருள்கள் அனைத்துமே கல்லீரலால் உறிஞ்சிக் கொள்ளப்படுகின்றன. மேலும் ரத்தத்தில் ஏற்படும் தொற்றுகளும் கல்லீரலைப் பாதிக்கின்றன.
கல்லீரல் ஆரோக்கியம் பாதிப்படைய ”high fructose corn syrup (HFCS)” பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகள் காரணமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பிஸ்கட், சாக்லட், Cereals, ஸ்ஃபாட் டிரிங்க்ஸ் ஆகியவற்றை தயாரிக்கும்போது அதில் ‘High fructose corn syrup' சேர்க்கப்படுகிறது. இது உடல்நலனுக்கு கேடானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
’High fructose corn syrup' சேர்த்து தயாரிக்கப்படும் உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது கல்லீரலில் கொழுப்பாக மாறிவிடும். இந்த நிலை தொடர்ந்தால், ’non-alcoholic fatty liver disease (NAFLD)’ நோய் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
இறைச்சி, நெய், வெண்ணெய் ஆகியவற்றை அளவோடு உணவில் சேர்ப்பது உடல்நலனுக்கு நல்லதே. அதேபோல, அதிகளவு பாக்கெட்களில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றை தொடர்ந்து சாப்பிடுவது உடல் நலனுக்கு கேடானது.
கல்லீரல் ஆரோக்கியமான இருக்க எதெல்லாம் நல்லது?
- பச்சை காய்கறிகள், கீரை வகைகள், ப்ரோக்கோலி ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.
- நல்ல கொழுப்புள்ள உணவுகளை உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வால்நட்,அவகேடோ,ஆலிவ் எண்ணெய் ஆகியவைகள் கல்லீரலுக்கு நல்லது.
- போதிய அளவு தண்ணீர் அருந்துவது கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். பொதுவாக, உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதில் தண்ணீர் பெரும் உதவி புரிகிறது. தண்ணீர் ஒரு சிறந்த ’detoxicating agent'.
பொறுப்புத்துறப்பு: இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.