ஜெயிலர் 2 படத்தில் யூடியூப் பிரபலம்.. நீங்க தானே அவரு.. ரஜினி கொடுத்த ரியாக்ஷன்!
ஜெயிலர் 2 படத்தில் பிரபல யூடியூப் பிரபலம் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இப்படத்தில் இடம்பெற்ற காவாலா பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. ரஜினி கரியரிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெற்ற பிளாக் க்யூமர் காமெடிகளும் ரசிக்கும் படியே இருந்தன. இந்நிலையில், ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு மும்மூரமாக நடைபெற்று வருகிறது. இதில், பிரபல யூடியூபர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினியை காண குவிந்த ரசிகர்கள்
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான ஜெயிலர் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை இயக்குநர் நெல்சன் இயக்கி வருகிறார். இப்படத்தில் அனிருத் இசையமைத்துள்ளார். முதல் பாகத்தை போன்றே இரண்டாம் பாகத்தில் யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தெலுங்கு நடிகர் பாலையா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் மைசூரில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது அங்கு சென்ற ரஜினிகாந்தை காண ரசிகர்கள் குவிந்தனர். ரஜினி காரில் அமர்ந்து ரசிகர்களை கையசைத்து நன்றி தெரிவித்தார். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலானது.
பிரபல யூடியூபர் மகிழ்ச்சி
ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு 2வது கட்டத்தை நெறுங்கியுள்ளது. முதல் பாகத்தை போன்று இதிலும் போதை மருந்து மற்றும் சிலை கடத்தலை மையப்படுத்தியே இயக்குநர் நெல்சன் படத்தை இயக்கி வருகிறார். முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், ஜெயிலர் 2 படத்தை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில் பிரபல யூடியூபர் மற்றும் திரைப்பட விமர்சகர் கோடாங்கி நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஜினி அவரை பார்த்ததும் காெடுத்த ரியாக்ஷனை பார்த்து ஒட்டுமாெத்த யூனிட்டுமே சர்ப்ரைஸ் ஆனதாக தெரிவித்திருக்கிறார்.
யார் இந்த கோடாங்கி?
யூடியூப்பில் படங்களுக்கு விமர்சனம் சொல்வதின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கோடாங்கி. இவர் தற்போது ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடித்திருப்பதாக அவரே தெரிவித்துள்ளார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், படப்பிடிப்பில் என்னை பார்த்ததும் ரஜினி சார் நீங்க கோடாங்கி தான, உங்களை எனக்கு தெரியும் என கூறியதும் உண்மையில் நம்ப முடியவில்லை. தலைவருக்கு என்னை தெரிஞ்சிருக்கு என்றதுமே வானத்தில் பறக்க ஆரம்பித்துவிட்டேன். அதை என் வாழ்க்கையில் மறக்க முடியாது என அவர் தெரிவித்தார்.




















