Rose Coconut Laddu: உடனே ஸ்வீட் எடுத்துக் கொண்டாடுங்க.. ரோஜா மனம் வீசும் தேங்காய் லட்டு.. ரெசிபி இதோ
Rose Coconut Laddu: லட்டு பிரியர்களுக்கு சில வகையான ரெசிபிகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன...
தேங்காய் பர்ஃபி பிடிக்கும் என்பவர்கள் இந்த ரெசிபியையும் செய்து பார்க்கலாம். ரோஸ் தேங்காய் லட்டு.
என்னென்ன தேவை?
தேங்காய் துருவல் - ஒரு கப்
கன்டன்ஸ்டு மில்க் - ஒரு கப்
துருவிய பாதாம், முந்திரி,பிஸ்தா - அரை கப்
ரோஸ் சிரப் - சிறிதளவு
நெய் - சிறிதளவு
குல்கந்த் - ஒரு கப்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் துருவிய தேங்காய், கன்ட்ன்ஸ்டு மில்க் சேர்த்து நன்றாக கலக்கவும். இனிப்புக்கு முழுக்க முழுக்க இதை மட்டுமே சேர்க்கிறோம். வெள்ளை சர்க்கரை இல்லை என்பதால் இனிப்புக்கு ஏற்றவாறு சேர்க்கவும். கொஞ்சம் நெய் சேர்க்கலாம். ரோஸ் எசன்ஸ் சேர்க்கலாம் அல்லது காய்ந்த நாட்டு ரோஜா மலர்கள் பிடிக்கும் என்றால் அதையும் சேர்ந்தது சுவை எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
இதை மூன்றையும் நன்றாக கலக்கவும். இதோடும், துருவிய பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்டவற்றை குல்கந்த் உடன் நன்றாக கலந்து வைக்கவும். இப்போது லட்டு தயாரிக்கலாம். தேங்காய் கலவையில் இருந்து சிறிதளவு எடுத்து அதன் நடுவே நட்ஸ் கலவையில் சிறிதளவு எடுத்து வைத்து லட்டு போல உருட்டவும். நெய் சிறிதளவு சேர்க்கலாம். தேங்காய் ரோசா லட்டு ரெடி.
தேங்காய் லட்டு
’தேங்காய் பர்பி’ நல்ல ஆரோக்கியமான இனிப்பு.தேங்காய்வை வைத்து லட்டும் செய்யலாம். எளிதாக செய்யலாம், துருவிய தேங்காய், கன்டன்ஸ்டு மில்க், ஏலக்காய் பொடி இதை அனைத்தையும் கலந்து சிறிதளவு நெய் சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும். இதில் வறுத்த முந்திரியும் சேர்த்துக்கொள்ளலாம்.
நட்ஸ் லட்டு
துருவிய பாதாம், முந்திரி, பிஸ்தா, திராட்சை, பேரிட்சை பழம் என எல்லாவற்றை கலந்து நெய் சேர்த்து லட்டுபோல தயாரிக்கலாம். நட்ஸ் லட்டு ரெடி.
ரவா லட்டு செய்முறை
என்னென்ன தேவை?
ரவா - 1/2 கிலோ
சர்க்கரை - 1 1/2 கப்
முந்திரி - ஒரு கப்
ஏலக்காய் தூள் - சிறிதளவு
செய்முறை
பாதம், கருப்பு திராட்சை என எதுவாக இருப்பினும் உங்கள் விருப்பத்திற்கேற்ப சேர்த்து கொள்ளலாம்.
ஒரு கடாயில் மிதமான தீயில் நெய் சேர்த்து முந்திரி, உலர்ந்த பழங்களை வறுத்தெடுக்க வேண்டும்.அதை தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதே கடாயில், சிறிதளவு நெய் சேர்த்து ரவையை 2 அல்லது 3 நிமிடம் வறுக்க வேண்டும். நிறம் மாறாமல் ரவையை வறுக்க வேண்டும். அப்போதான் லட்டு சுவையாக இருக்கும். ரவையை வறுத்து தனியே வைக்கவும்.
இனிப்பு சுவைக்காக, சர்க்கரையை மிக்சியில் பொடியாக அரைத்து வைக்க வேண்டும். இல்லையெனில் சர்க்கரையை சிறிதளவு தண்ணீர் சேர்த்து கம்பி பதத்தில் சர்க்கரை பாகு காய்ச்சியெடுக்கலாம்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த ரவை, முந்திரி சிறிதளவு உருக்கிய நெய் சேர்த்து லட்டு போல பிடிக்கவும். இதில் சிறிதளவு பால் சேர்த்து கலவை சூடாக இருக்கும்போதே சிறிய லட்டுகளாக பிடிக்கவும். இப்போது சுவையான ரவா லட்டு ரெடி. பால் சேர்த்தால் அதிக நாட்களுக்கு லட்டு இருக்காது. சர்க்கரை பாகு முறை என்றால் சிறிதளவு ரவாவில் ஊற்றி லட்டுக்களாக பிடிக்கவும்.
இதையும் ட்ரை பண்ணுங்களேன்
- ரவா லட்டு விரும்பி சாப்பிடுபவர்கள் என்றால் பல வகையானவற்றை முயற்சி செய்யலாம்.
- ரவா லட்டு தயாரிக்கும்போது சர்க்கரைக்கு பதிலாக மில்க்-மெய்ட் (MILKMAID) சேர்க்கலாம்.
- ரவா லட்டில் உடைத்த பாதாம், பால் பவுடர் சேர்த்தும் செய்யலாம்.
- சாக்கோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்து சாக்லேட் ரவா லட்டு தயாரிக்கலாம்.
- ஹெல்த்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கேழ்வரகு, கம்பு மாவு சிறிதளவு சேர்த்து கொள்ளலாம்.
- இதோடு வறுத்த பூசணி விதை, சூரியகாந்தி விதைகள் சிறிதளவு பொடித்து சேர்க்கலாம்.
- பேரீட்சை பழம் சிறியதாக நறுக்கி சேர்த்து ரவா லட்டு செய்யலாம்.
- ரெண்டு நாட்களுக்கு பயன்படுத்திவிடுவீர்கள் என்றால் பால் சேர்க்கலாம். உடனே சாப்பிட்டுவிடும் சூழலில் மட்டும் பால் சேர்த்து ரவா லட்டு தயாரிக்கவும்.