TVK protest: ”நீயெல்லாம் பொதுச்செயலாளரா?” புஸ்ஸியை பொளக்கும் பாஜக! என்னன்னு தெரியாம போராட்டமா
வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் தவெகவினர் நேற்று போராட்டம் நடத்தினர். அந்த சட்டம் குறித்து எதுவுமோ தெரியாமல் தவெகவினர் போராட்டம் நடத்தியதாகவும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்துக்கே அது குறித்து புரிதல் இல்லை என்றும் பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
வக்பு வாரிய திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இந்த சட்ட திருத்தம் மிகப்பெரிய திருப்புமுனை என்றும் நீண்ட காலமாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களுக்கும் இந்த மசோதா உதவும் எனவும் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் கூறி வரும் நிலையில், தமிழ் நாட்டில் இந்த சட்ட திருத்தத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த சட்டத்திற்கு எதிராக சட்ட போராட்டம் நடத்தப்படும் என்று கூறுயுள்ளார்.
அதேபோல், அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக உள்ளிட்ட கட்சிகள் வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிரான நிலைப்பட்டில் இருக்கின்றன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் இந்த மசோதாவை எதிர்த்து தமிழ் நாடு முழுவதும் தவெக போராட்டம் நடத்தும் என்று நேற்று அறிவித்தார்.
அதேபோல், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் நேற்று பனையூரில் போராட்டம் நடத்தப்பட்டது.அப்போது அவர், ”இஸ்லாமியர்களை பாதிக்கும் விதமாக இந்த சட்டம் இருக்கிறது. ஒன்றிய அரசு கண்டிப்பாக இதனை திரும்ப பெறவேண்டும். அதற்காக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். என்று கூறினார். உடனே செய்தியாளர்கள் எந்த இடத்தில் இஸ்லாமியர்கள் பாதிக்கப்படுகிறார் என்று பாஜக கேட்கிறதே என கேள்வி கேட்க பதில் சொல்லாமல் நழுவினர் ஆனந்த். கடைசி வரை அந்த சட்டத்தால் என்ன பாதிப்பு என்று அவர் சொல்ல வில்லை என்று நெட்டிசன்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். பொதுச்செயலாளரே இப்படி அரசியல் தெளிவு இல்லாமல் இருந்தால் எப்படி என்று விமர்சனம் எழுந்துள்ளது.





















