மேலும் அறிய

Sangu Poo Tea: 'கிரீன் டீ' தெரியும்… அதென்ன 'ப்ளூ டீ '? சங்கு பூ தேநீரில் இவ்வளவு நன்மைகளா..?

கிரீன் டீ போலவே கொழுப்பு குறைப்பு தொடங்கி, புற்று நோயை எதிர்க்கும் சக்தி வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் அடங்கியுள்ள இதனைப் பற்றி அறிந்தால் உடனே ஆர்டர் போட்டு விடுவீர்கள்.

கிரீன் டீ குறித்து நம் அனைவருக்கும் தெரியும். ப்ளூ டீ தெரியுமா? உடல் எடை குறைப்பு, உடலின் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல், உடல் புத்துணர்ச்சி, கொழுப்பு சேராமல் தடுக்கும் என்று கிரீன் டீ குறித்து நமக்கு நிறைய தெரியும். அதே போல இந்த ப்ளூ டீ-யும் பல மருத்துவ நன்மைகளை நமக்கு வழங்குகிறது. கிரீன் டீ போலவே கொழுப்பு குறைப்பு தொடங்கி, புற்று நோயை எதிர்க்கும் சக்தி வரை ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இதில் அடங்கியுள்ளன. அவை என்ன என்று தெரிந்துகொண்டால் உடனே ஆர்டர் போட்டு விடுவீர்கள். 

முடி வளர்ச்சி

தலையின் மேற்பாகத்தில் இருக்கும் நுண் துளைகளில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதன் மூலம், முடி வளர்ச்சியை அதிகரிக்கக் கூடியது. இந்த ப்ளூ டீ உடலில் சேரும் நச்சுக்களை நீக்கி கல்லீரலை பாதுகாக்க உதவுகிறது.

சர்க்கரை அளவு சீராகும்

நீரிழிவு நோயாளிகளுக்கு, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராகப் பராமரிக்க உதவும் என்று ஆராய்ச்சிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sangu Poo Tea: 'கிரீன் டீ' தெரியும்… அதென்ன 'ப்ளூ டீ '? சங்கு பூ தேநீரில் இவ்வளவு நன்மைகளா..?

நோய் எதிர்ப்பு சக்தி

மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், பல நோய் தொற்றுக்களிலிருந்தும் உடலை பாதுகாப்பதாக சொல்லப்பட்டுள்ளது.

எடை குறைப்பு

கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் பழக்கம் அதிகம் உள்ளவர்களுக்கு ஏற்படும், உடல் பருமனை பிரச்சனைகளுக்கு 'ப்ளூ டீ ' பெரிதும் உதவியாக இருக்கும். தேவையற்ற கொழுப்பை கரைத்து வெளியேற்றும் சக்தியை இந்த டீ கொண்டுள்ளது.

மன அழுத்தத்தை குறைக்கும்

இந்த ப்ளூ டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளில் மிகவும் முக்கியமானது, மன அழுத்தத்தை தவிர்க்க உதவுவதாகும் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்: Yaadhum Oore Yaavarum Kelir: கதை திருட்டு புகாரில் சிக்கிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ .. விஜய் சேதுபதி ரசிகர்கள் அதிர்ச்சி

அஜீரணக் கோளாறு நீங்கும்

அதோடு இந்த வகை டீ அஜீரணக் கோளாறு பிரச்சினைகளை தீர்ப்பதுடன், வயிற்றில் உருவாகும் எரிச்சலையும் தடுக்கும்.

குடற்புண்ணுக்கு மருந்தாக இருக்கும்

வேலை பளுவின் காரணமாக, அல்லது வேறு காரணங்களால் உரிய நேரத்திற்குச் சரியாக சாப்பிட முடியாதவர்களுக்கு நாளடைவில் குடற்புண் பாதிப்பு ஏற்படும் பாதிப்புகள் அதிகம். அவர்களுக்கு மிகவும் பயனுள்ள பானமாக 'ப்ளூ டீ' இருக்கும்.

புற்றுநோய் செல்களை அழிக்கும்

'ப்ளூ டீ'யில் உள்ள 'ஃப்ளேவனாய்ட்ஸ்' என்னும் ரசாயனம் புற்று நோயை உருவாக்கக்கூடிய செல்களை கூட அழிக்கிறது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

Sangu Poo Tea: 'கிரீன் டீ' தெரியும்… அதென்ன 'ப்ளூ டீ '? சங்கு பூ தேநீரில் இவ்வளவு நன்மைகளா..?

உடல் வெப்பத்தை சீராக வைக்கும்

இந்த ப்ளூ டீ உடலின் வெப்ப நிலையைச் சீராக வைக்கவும் பெரிதாக உதவுகிறது. உடல் வெப்பம் சீரற்ற நிலையில் இருப்பவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் சுறுசுறுப்பாக செய்ய இயலாமல் இருக்கும், மேலும் உடலில் கட்டிகள் ஏற்படும். அவர்கள், ப்ளூ டீ அருந்தினால் பெரும் நன்மைகளை பெறலாம்.

இந்த டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்: 

சங்கு பூ - சிறிதளவு

தேன் - 1 டீஸ்பூன்

எலும்பிச்சை சாறு - 2 டீஸ்பூன்

செய்முறை: க்ரீன் டீ எப்படி செய்வோமா, அதே போல்தான் இந்த ப்ளூ டீ யும் தயாரிக்க வேண்டும். மிகவும் சுலபமாக தயாரித்து விடக்கூடிய டீ தான் இது. கொதிக்க வைத்த தண்ணீரில் சங்கு பூக்களை போட்டு 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும். அதில் எழுமிச்சை சாற்றை ஒருசில சொட்டுக்கள் விட்டு, இனிப்புக்காக தேவையான அளவு சுத்தமான தேன் சேர்த்து சூடாகவோ அல்லது குளிர்ச்சி செய்தோ பருகலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
TN Rain Update: மீண்டுமா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம், வானிலை அறிக்கை
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
INDIA Bloc: சுத்து போட்டு அடிக்கும் கூட்டணி கட்சிகள், கலங்கி நிற்கும் காங்கிரஸ் - ராகுல் தலைமைக்கு ஆப்பா? அடுத்து என்ன?
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல தபேலா மேஸ்ட்ரோ ஜாகிர் உசேன் மரணம்! ரசிகர்கள் அதிர்ச்சி
Thiruppavai Paadal 1:
Thiruppavai Paadal 1: "கண்ணனை பார்த்து..பார்த்து, தாயின் கண்களே அழகாகிவிட்டது" போற்றி பாடும் ஆண்டாள்!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
Embed widget