Shruthi Narayanan: சிறகடிக்க ஆசை பிரபலம் ஸ்ருதி நாராயணன் யார்? நடிக்க வந்தது எப்படி?
ஆபாச வீடியோ லீக்கால் பேசுபொருளாகியுள்ள ஸ்ருதி நாராயணன் யார்? அவர் நடிக்க வந்தது எப்படி? என்பதை கீழே விரிவாக காணலாம்.

தமிழில் முன்னணி தொலைக்காட்சியாக உலா வருவது விஜய் தொலைக்காட்சி. இந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் ஸ்ருதி நாராயணன். இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யார் இந்த ஸ்ருதி நாராயணன்?
நடிகை ஸ்ருதி நாராயணன் யார்? அவர் எப்படி திரைத்துறையில் வந்தார்? என்பதை கீழே விரிவாக காணலாம். ஸ்ருதி நாராயணன் சென்னை, தி நகரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்தவர். அங்கு அவர் விசுவல் கம்யூனிகேஷன்ஸ் பட்டம் பெற்றுள்ளார். பள்ளி படிக்கும்போதே அவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் இருந்து வந்துள்ளது. மேலும், 12ம் வகுப்பு படிக்கும்போதே அவர் திரைத்துறைக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துள்ளார்.
கல்லூரி படிக்கும்போத அவருக்கு யூ டியூப் சேனல்களில் நடிக்க வா்ய்ப்பு கிட்டியுள்ளது. ஒரு சிறு நிறுவனத்தில் 2021ம் ஆண்டு நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பயிற்சி பெற்ற ஸ்ருதி, தனது கல்லூரி படிப்பை முடித்தவுடன் 2022ம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் வாய்ப்பும் கிட்டியுள்ளது. பின்னர், ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய ஸ்ருதிக்கு 2023ம் ஆண்டு மார்ச் மாதம் சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க வாய்ப்பு கிட்டியுள்ளது.
சமந்தாவின் வெப்சீரிஸ்:
இவர் சிறகடிக்க ஆசை மட்டுமின்றி கார்த்திகை தீபம், மாரி சீரியலிலும் நடித்துள்ளார். ஆனாலும், இவருக்கு சிறகடிக்க ஆசை சீரியலில் இவர் நடித்து வரும் வித்யா கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத் தந்துள்ளது. மேலும் சமந்தாவின் சிடாடலிலும் நடித்துள்ளார்.
நடிக்க வந்தது எப்படி?
ஸ்ருதி நாராயணன் ஒரு முறை கல்லூரியில் படிக்கும்போது அவரது தோழி ஒருவருக்கு யூ டியூப் தொலைக்காட்சியில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், அவரால் நடிக்க இயலாத காரணத்தால் அவருக்கு பதிலாக ஸ்ருதி நாராயணன் சென்றுள்ளார்.
பின்னர், படிப்படியாக விஜய் தொலைக்காட்சி வரை நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வரும் ஸ்ருதி நாராயணனின் குடும்பத்தினர் தொடக்கத்தில் ஸ்ருதி நடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பின்னர், அவர்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் காரணமாக அவர் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக தெரியவந்துள்ளது. மேலும், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் தற்போது அனைவருக்கும் தெரியும் வகையில் இருந்து தனிப்பட்ட கணக்காக மாற்றியுள்ளார்.