Shruthi Narayanan: ஆடிஷன் பத்தி அன்றே பேசிய ஸ்ருதி நாராயணன்! என்ன சொன்னாங்க தெரியுமா?
Shruthi Narayanan Viral Video: சிறகடிக்க ஆசை சீரியல் பிரபலம் ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி? என்றும், ஆடிஷன் பற்றியும் பேசியது வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன். சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாக உலா வரும் இவரது ஆபாச வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பேசுபொருளாகி வருகிறது. ஆடிஷனுக்காக எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் இது கூறப்படுகிறது.
ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி?
இந்த நிலையில், ஸ்ருதி நாராயணன் நடிக்க வந்தது எப்படி என்பதை கீழே விரிவாக காணலாம். இதுதொடர்பாக, ஒரு முறை 3 மாதங்களுக்கு முன்பு அவர் நேர்காணல் ஒன்றில் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, "என் பிரண்ட்க்கு வர வேண்டியதுதான் எனக்கு வந்துடுச்சு. நான் விஸ்காம் படிச்சுருக்கேன். காலேஜ்ல விஸ்காம்தான் படிச்சேன். டெலிவிஷன் ப்ரொடக்ஷன்லதான் ஸ்பெஷலைஸ் பண்ணேன்.
ஒருநாள் எனக்கு என் ப்ரண்ட்கிட்ட இருந்து போன் வந்துச்சு. ஒரு யூ டியூப் சேனல்ல ஒரு கேரக்டர் ஒன்னு இருக்கு. நான் அவளைத்தான் கூப்பிடலாம்னு நினைச்சேன். ஆனா அவ அவெய்லபிளா இல்ல. நீ வர்றியா?னு கேட்டா. சரி ஓகே ட்ரை பண்ணி பாப்போம். நாம எல்லாமே கத்துக்குறோம். இதுவும் கத்துப்போமே. ட்ரை பண்ணி பார்ப்போமேனு வந்தது. அது அப்படியே ஒரு அழகான பயணமாக மாறிடுச்சு.
ஆடிஷன்:
நான் பள்ளிக்கூடம் படிக்குறப்பவே மீடியாவுக்கு போகனும்னு முடிவு எடுத்துட்டேன். ஆனா, தொடக்கத்துல எங்கே இருந்து ஆரம்பிக்குறதுனு தெரியல. வீட்ல ஆரம்பத்துல ஒரு சின்ன சின்ன பயம் இருந்துச்சு. இப்போ வீட்ல அடுத்து என்ன நடக்கப்போதுனு அப்டேட் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க.
2023 மார்ச்ல கால் வந்துச்சு. இந்த மாதிரி ஒரு ரோல் இருக்குது. ஆடிஷன் போகுது. நீங்க ட்ரை பண்றீங்களானு கேட்டாங்க. ஆடிஷன் போனேன். சில நாட்கள்லயே எனக்கு கால் வந்துடுச்சு. 12ம் வகுப்பு முடிச்ச பிறகு சென்னை வந்தேன். காலேஜ் போனேன். ஆரம்பத்துல அப்பா - அம்மா ஒத்துக்க மாட்டாங்க. அவங்களை நிறைய பேசி சம்மதிக்க வச்சேன். இதுதான் என்னோட ஆர்வம்னு சொல்லிட்டேன். நம்ம போற பாதை சரினு நமக்கு தெரிஞ்சாலும் சில கடினங்களும் இருக்கும். அது எப்படி வேணும்னாலும் வரலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
தமிழில் நம்பர் 1 சீரியலாக இருப்பது சிறகடிக்க ஆசை. இந்த சீரியலுக்கு என்று ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





















