Gokulashtami: ‛கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா கிருஷ்ணா...’ தமிழின் டாப் 15 கிருஷ்ண ஜெயந்தி பாடல்கள்!
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் கிருஷ்ணா அவதாரம் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது.
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழ் சினிமாவில் கடவுள் கிருஷ்ணர் குறித்து இடம் பெற்ற பாடல்களை காணலாம்
View this post on Instagram
நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் கிருஷ்ணா அவதாரம் அற்புதங்களும் லீலைகளும் நிறைந்தது. கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக இந்த அவதாரம் எடுக்கப்பட்டதாக புராணங்கள் சொல்கிறது. சின்னக் கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். இதனால் அஷ்டமி திதிக்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே கொண்டாட்டங்கள் நடைபெறும். பகவான் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததால் வட இந்தியாவில் சில மாநிலங்களில் நேற்றும், தமிழகத்தில் இன்றும் இந்த விழா கிருஷ்ண ஜெயந்தி அல்லது கோகுலாஷ்டமியாக கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடவுள் கிருஷ்ணர் குறித்து படங்களும், பாடல்களும் வெளியாகியுள்ளது. அதனைப் பற்றி காணலாம்.
1. கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா..கிருஷ்ணா (தெய்வமகன்)
2. கோபியர் கொஞ்சும் ரமணா (திருமால் பெருமை)
3. கங்கை கரை தோட்டம் (வானம்பாடி)
4. கண்ணன் வந்தான் (ராமு)
5. உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்)
6. கண்ணா கருமைநிற கண்ணா (நானும் ஒரு பெண்)
7. நீல நிற மேகமெல்லாம் (திருமலை தெய்வம்)
8. கோகுலத்தில் கண்ணா கண்ணா (கோகுலத்தில் சீதை)
9. முகுந்தா முகுந்தா ( தசாவதாரம்)
10. யமுனை ஆற்றிலே (தளபதி)
11. ஆயர் பாடி மாளிகையில் ( கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)
12. புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)
13. கண்ணா நீ தூங்கடா ( பாகுபலி 2)
14. கோகுலத்து பசுக்கள் (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)
15. கோகுலத்தில் ஒருநாள் (கிருஷ்ணர் பக்தி பாடல்கள்)