Betting Apps Case: பெட்டிங் APP விளம்பர விவகாரம்; நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம்!
Betting Apps Case: விதிகளை மீறி பெட்டிங் ஆப்களை ப்ரோமோட் செய்த விவகாரத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆன்லைன் சூதாட்ட செயலிகளை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரத்தில் நடித்ததற்காக நடிகர் பிரகாஷ்ராஜ் மன்னிப்பு கோரினார்.
விதிமுறைகளை மீறி பெட்டிங் ஆப்களை ப்ரோமோட் செய்த காரணத்திற்காக ரானா டகுபதி , விஜய் தேவரகொண்டா , மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட 25 தெலுங்கு நடிகர்கள் மீது தெலங்கானா காவல்துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாதைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
பிரகாஷ் ராஜ் மன்னிப்பு கோரி வீடியோ:
ஆன்லைன் கேம்பிளிங் தொடர்பான விளம்பரத்தில் நடித்தது குறித்து பிரகாஷ் ராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்,” எல்லாரிடமும் கேள்வி கேட்கிறேன். இந்த விசயத்தில் பதிலளிப்பது என்னுடைய கடமை. பெட்டிங் ஆப் தொடர்பான விளம்பரத்தில் நடித்தேன். இது தொடர்பாக காவல் துறையிடம் இருந்து எந்தவித நோட்டீஸும் வரவில்லை. அப்படியே வந்தாலும் அதை சட்ட ரீதியில் எதிர்கொள்வேன். சமூக வலைதளங்களில் மூலமே இது பற்றி அறிந்தேன். 2016- ஜூன் மாதத்தில் இப்படியான விளம்பரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதில் நடித்தேன். சில மாதங்களிலேயே அது தவறானது என உணர்ந்தேன். ஒப்பந்தத்தை ரத்து செய்தேன். ஆனால், விளம்பரத்தை என்னால் நிறுத்த முடியவில்லை. அதன் பிறகும், மீண்டும் நடிக்க அழைத்தார்கள். ஆனால், நான் விருப்பம் இல்லை என்று சொல்லிவிட்டேன். விளம்பரம் நடித்து 9 ஆண்டுகள் ஆகிறது. 2021-ம் ஆண்டிற்கு பிறகு வேறொரு நிறுவனம் இந்த விளம்பரத்தை பயன்படுத்தியது. அவர்களிடம் நான் நடித்த விளம்பரத்தை பயன்படுத்த வேண்டாம் என்று தெரிவித்தேன். என மனசாட்சிக்கு தவறு எனப்படுவதை ஒருபோது செய்ய மாட்டேன். அதற்கு மன்னிப்பு கேட்கிறேன். அதோடு, உங்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இருப்பதாக உணர்ந்து இதை செய்கிறேன்.
My response 🙏🏿🙏🏿🙏🏿 #SayNoToBettingAps #justasking pic.twitter.com/TErKkUb6ls
— Prakash Raj (@prakashraaj) March 20, 2025
இளைஞர்களுக்கு கோரிக்கை:
” ஆன்லைன் கேம்பிளிங் அல்லது பெட்டிங் தொடர்பான விசயத்தில் பாதிக்கப்படாமல் இருக்க விழிப்புடன் இருங்கள். 'Saynotobetting'! இதுபோன்றவைகளால் பாதிக்கப்படாமல் பாதுகாப்பாக இருங்கள்.” என்று இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

