"ஆந்திராவின் சதாம் உசேன்" ஜெகன் மோகன் ரெட்டியை போட்டு பொளந்த சந்திரபாபு நாயுடு மகன்!
ஜெகன் மோகன் ரெட்டியை ஆந்திராவின் சதாம் உசேன் என அமைச்சர் நாரா லோகேஷ் விமர்சித்துள்ளார்.

ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, தன்னை ஆந்திராவின் சதாம் உசேன் போல் நினைத்து கொண்டதாக சந்திரபாபு நாயுடுவின் மகனும் ஆந்திர மாநிலத்தின் அமைச்சருமான நாரா லோகேஷ் சாடியுள்ளார். ருஷிகொண்டா ஹில்ஸில் ஜெகன் மோகன் ரெட்டி கட்டிய முதலமைச்சர் வீடு விவாத பொருளாக மாறியுள்ள நிலையில், ஜெகன் மோகன் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.
ஜெகன் மோகன் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகள்:
கடந்த ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, சந்திரபாபு நாயுடு அரசாங்கம், ஜெகன் மோகன் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. மக்களின் பணத்தை அவர் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
குறிப்பாக, ருஷிகொண்டா ஹில்ஸில் ஜெகன் மோகன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட முதலமைச்சர் வீடு குறித்து தெலுங்கு தேசம் கட்சி பகீர் தகவல்களை வெளியிட்டு வருகிறது. முக்கிய சுற்றுலா தலமான அழகிய ருஷிகொண்டா மலைகளில் 10 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த வீடு நான்கு பிளாக்குகளை கொண்டுள்ளது.
இந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில அமைச்சருமான நாரா லோகேஷ், "இது 'ஷீஷ் மஹால்' ஆக மாற்றப்படுவதற்கு முன்பு ஆந்திரப் பிரதேச சுற்றுலாத் துறையின் ஒரு திட்டமாக இருந்தது.
ஆந்திராவின் 'சதாம் உசேன்'
முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி, தான் ஆந்திராவின் 'சதாம் உசேன்' என்றும், 30 ஆண்டுகள் ஆட்சியில் இருப்பேன் என்றும் நினைத்திருக்கிறார். என் தாத்தா முதலமைச்சராக இருந்துள்ளார். என் அப்பா முதலமைச்சராக இருந்துள்ளார்.
ஆனால், அவர்களிடம் கூட இவ்வளவு பெரிய அறைகளை நான் பார்த்ததில்லை. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆந்திரா மீது ரூ. 200 கோடி அபராதம் விதித்துள்ளது. ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் தலைவருக்கு ஒரு சிறிய குடும்பம் உள்ளது. அவரது சகோதரி மற்றும் தாயார் குடும்பத்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நான்கு பேர் ஒரு வீட்டில் வசிக்க, ரூ.700 கோடி செலவிடப்பட்டது. பிரதமருக்கு கூட இவ்வளவு பெரிய வீடு இல்லை" என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

