தமிழக அரசில் 1200 பணியிடங்கள்; விரைவில் சிறப்புத் தேர்வு- அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கான ஆயிரத்து 200 பணியிடங்களை நிரப்ப சிறப்பு தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சட்டப்பேரவையில் சமூகநலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான 1,200 பணி இடங்களை நிரப்ப சிறப்புத் தேர்வு நடத்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டப்பேரவை உறுப்பினர் இனிகோ இருதயராஜ் பேசினார். அவர் கூறும்போது, கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, 2 ஆண்டுகள் தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய மாற்றுத் திறனாளிகளைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கப்படும் என உத்தரவிட்டார். ஆனால், இந்த உத்தரவு முழுமையாக நடைமுறைக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்து அமைச்சர் கீதா ஜீவன் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கானப் காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும். முதல்வர் இதுகுறித்த தேர்வு அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவதற்குள் வெளியிட ஆணை இட்டுள்ளார்.
அரசாணையை மறு ஆய்வு செய்து மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்புத் தேர்வு நடத்தப்படும். இதற்காக 1,200 பணியிடங்கள் கண்டறியப்பட்டு விரைவாக சிறப்பு தேர்வு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி பணி நடைபெற்று வருகிறது.
பெற்றோருக்கு இருசக்கர வாகனங்கள்
அதேபோல ஆட்டிசம், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் பெற்றோருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்குவதற்கான கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்
அதேபோல மாற்றுத் திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுமா என்றும் இனிகோ இருதயராஜ் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கீதா ஜீவன், 2009-10 முதல், இரு கால்களும் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 2024ம் ஆண்டு முதல் ஒருகால் பாதித்து, கைகள் நன்றாக இருக்கும் 18 முதல் 65 வயது வரையிலான மாற்றுத்திறனாளிகளுக்கும் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

