பிரபாஸ் நிலை இதுதான்; நாக சைதன்யா வாழ்க்கை.. அந்த ஹீரோ தற்கொலை செய்துகொள்வார் - வேணு சாமி!
தெலுங்கு திரையுலகில் சர்ச்சைக்குரிய ஜோதிடரான வேணு சுவாமி மீண்டும் சோசியல் மீடியா ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளார்.

டோலிவுட் படங்களுக்கு தற்போது உலகம் முழுவதும் ஒரு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. எஸ்.எஸ். ராஜமௌலி மற்றும் சுகுமார் போன்ற இயக்குநர்கள் உலகம் முழுவதும் பாராட்டப்படும் படங்களைத் தயாரித்து தெலுங்கு சினிமாவின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதேபோல் நடிகர், நடிகைகளும் தெலுங்கு சினிமாவின் தரத்தை உயர்த்த முயற்சிக்கும் அதே வேளையில், நவீன காலத்திலும் கூட ஜோதிடர்கள் சிலர் திரையுலகினரைப் பற்றி தவறான அல்லது மூட நம்பிக்கையான விஷயங்களை பரப்பி வருகின்றனர்.
தெலுங்கு திரையுலகில் பிரபலங்களின் ஜாதகங்களைப் பற்றி பரபரப்பான கருத்துக்களைச் சொல்வதற்காக பிரபலமானவர் ஜோதிடர் வேணு சுவாமி. டோலிவுட்டில் பெரிய ஹீரோக்களின் ஜாதகங்களைப் பற்றி எதையாவது சொல்லி அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கக்கூடியவர். சமீபத்தில் கூட நாக சைதன்யா மற்றும் சோபிதா துலிபாலா 2027ம் ஆண்டில் விவகாரத்து செய்வார்கள் என தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது. 2017 இல் திருமணம் செய்து கொண்ட நாக சைதன்யா மற்றும் சமந்தா 2021 இல் விவாகரத்து பெற்றனர். சமந்தா உடனான விவாகரத்துக்குப் பிறகு, நாக சைதன்யா சோபிதா துலிபாலாவை 2024 இல் திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், நாக சைதன்யா- சோபிதா துலிபாலா தம்பதிகள் எதிர்வரும் 2027ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொள்வார் என்றும் வேறொரு பெண்ணால் நாக சைதன்யா பெரும் சவால்கள் எதிர்கொள்வார் என்றும் வேணு சுவாமி சர்ச்சையில் சிக்கினார். திருமணம் நடக்காத போது விவாகரத்து பற்றி பேசியதால் ரசிகர்கள் கோபமடைந்து ஜோதிடர் மீது வழக்கு தொடரப்பட்டது. தெலுங்கானா நீதிமன்றத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, “விவாகரத்து கணிப்பு வழக்கின் மேலதிக விசாரணையை மகளிர் ஆணையகம் நடத்த வேண்டும்..” என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையாக வைத்து ஜோதிடர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.ஆனால் இதை எல்லாம் பற்றி கவலைப்படாத வேணு சுவாமி, வழக்கை சட்ட ரீதியில் சந்திக்கத் தயார் என சவால் விட்டிருந்தார்.

இப்படி எடக்குமடக்காக பேசி பலரிடமும் எச்சரிக்கைகளை வாங்கியுள்ள வேணு சுவாமி, தற்போது தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக இருக்கக்கூடிய ஒரு கதாநாயகி அல்லது ஒரு நாயகன் தற்கொலை செய்து கொள்ளும் நாள் நெருங்கிவிட்டது எனக்கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். சமந்தா ரூத் பிரபு, விஜய் தேவரகொண்டா மற்றும் பிரபாஸ் ஆகியோர் தான் அந்த நட்சத்திரங்கள். இதுதொடர்பாக வேணு சுவாமி பேசிய ஆடியோ வெளியாகியுள்ளது. அதில் ததனது கணக்கீடுகளின்படி, விஜய் தேவரகொண்டா தற்கொலை செய்து கொள்வார்கள் எனக்கூறியுள்ளார். மேலும் பிரபாஸுக்கு ஏராளமான உடல் நலப்பிரச்சனைகள் இருப்பதாகவும் பேசியுள்ளார்.

ஆடியோவைக் கேட்ட ரசிகர்கள் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்துள்ளனர். இதுபோன்ற விஷயங்கள் பிரபலங்களையும் அவர்களது குடும்பத்தினரையும் காயப்படுத்தக்கூடும் என்று பலரும் கவலை தெரிவித்துள்ளனர்.





















